Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி மீது அதிருப்தியில் சன் பிக்சர்ஸ்.. கொஞ்சம் கூட அட்ஜஸ்ட் பண்ணலன்னா எப்படி என புலம்பல்
முருகதாஸ் இயக்கத்தில் பக்கா கமர்சியல் படமாக வெளிவந்த தர்பார் படம் பெரிய அளவில் வசூல் செய்தாலும் விநியோகஸ்தர்கள் தரப்பில் அந்த படம் நஷ்டம் என்று கூறி வந்தனர். அதற்காக சில பிரச்சினைகளும் நடைபெற்றது.
அந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமும் ரஜினிக்கு சப்போர்ட் செய்யாததால் இனி லைகா படங்களில் நடிக்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். அதன் ஆரம்ப கட்டமாகத் தான் மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைத்தார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் உருவாகிக் கொண்டிருந்தது. எதிர்பாராத சூழ்நிலையால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் தடைபட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரஜினிக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் படப்பிடிப்பு இருக்கிறதாம்.
கிட்டத்தட்ட 20 முதல் 25 நாட்கள் தான் என்கிறது வட்டாரம். ஆனால் ரஜினிகாந்த் கொரோனா தாக்கம் முழுவதும் முடிவடைந்த பிறகு தான் படப்பிடிப்புக்கு வருவேன் என தெளிவாக சொல்லி விட்டாராம். அல்லது அதற்குள் கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்தாலும் நடிக்க தயார் என தெரிவித்து விட்டார்.
இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறதாம் சன் பிக்சர்ஸ் நிறுவனம். அதுமட்டுமில்லாமல் இரண்டு சண்டைக் காட்சிகள் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டும்தான் அண்ணாத்த படத்தில் ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகளாம்.
பொங்கலுக்கு படத்தை கொண்டுவர நினைத்து சன் பிக்சர்ஸ் ரஜினியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் ரஜினி இப்படிக் கூறியது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் ரஜினியின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தள்ளி வைத்து விட்டனர்.
