Tamil Cinema News | சினிமா செய்திகள்
7 பிரபல ஹீரோக்கள்.. 1000 கோடி பட்ஜெட்.. பிரம்மிக்க வைக்கும் சன் நிறுவனம்
தமிழ்சினிமாவில் இந்திய அளவில் புகழ்பெற்ற சன் பிக்சர்ஸ் இந்த ஆண்டு முன்னணி நடிகர்களை வைத்து படங்களை எடுக்க முடிவு செய்துள்ளது. இந்த வருட தொடக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘அண்ணாத்த’ படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் இதில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா மற்றும் 90களில் ரசிகர் மனதில் நீங்கா இடம் பெற்ற குஷ்பூ, மீனா போன்றவர்கள் நடித்து வருகின்றனர். இவர்களுடன் சூரி, பிரகாஷ்ராஜ் போன்ற பிரபலங்களும் இருப்பதால் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
சிறுத்தை சிவா இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எப்படி முத்து, படையப்பா, அருணாச்சலம் போன்ற வெற்றி படங்களை அமைந்ததோ அதே போல் இந்தப்படமும் இருக்கும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இதனைத்தொடர்ந்து லாரன்சை வைத்து மற்றுமொரு படம் எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தொலைக்காட்சி விளம்பரங்களின் மூலம் ரசிகர்களை வளைத்துப் போட்டு விடுவார்கள். அந்த வகையில் வசூல் ரீதியாக எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வேட்டையாடி விடுவார்கள்.
இந்த வருடத்தில் மட்டும் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சூர்யா, தளபதி விஜய், சிவகார்த்திகேயன் போன்றவர்களை வைத்து மெகா ஹிட் திரைப்படங்களை தயாரிக்க உள்ளனர். இதனால் கிட்டத்தட்ட 1000 கோடி வரை முதலீடு செய்வதில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
இந்த வருடம் தமிழ் சினிமாவில் ரெக்கை கட்டி பறக்க போகும் சன் பிக்சர்ஸ் இயக்குனர்களை தேர்வுசெய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு இடையில் கொரோன வைரஸின் பாதிப்பு இருப்பதால் கொஞ்சம் தாமதமானாலும் முன்னணி நடிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
இவை மட்டும் நடந்தால் இந்த வருடம் சன் பிக்சர்ஸ் குடும்பம் அசுர வளர்ச்சியடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
