Connect with us

Videos | வீடியோக்கள்

கையில் கத்தியுடன் வேட்டைக்கு தயாரான முத்துவேல் பாண்டியன்.. பிறந்தநாள் சர்ப்ரைசாக வந்த ஜெயிலர் வீடியோ

இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

rajini-jailer

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கடந்த சில வாரங்களாகவே இந்த கொண்டாட்டத்திற்கு தயாரான ரசிகர்கள் இன்று அவருடைய பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் ட்விட்டர் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அவருடைய பிறந்தநாள் சிறப்பு கொண்டாட்டமாக ரஜினி நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த பாபா திரைப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. புது படத்திற்கு கொடுக்கும் ஆதரவை போலவே ரசிகர்கள் இந்த படத்தையும் ஆவலுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஜெயிலர் திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also read: பாபாவை பங்கம் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.. நாலாபுறமும் வாங்கும் கல்லடி

நெல்சன் இயக்கத்தில் ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அதை தொடர்ந்து இப்படம் குறித்து வெளியான ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களை பரவசப்படுத்தியது. அதைத்தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கும் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பொதுவாகவே நடிகர்களின் பிறந்தநாளன்று பட குழு ஏதாவது ஒரு சர்ப்ரைஸை கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட செய்து விடும். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் இப்போது இந்த திரைப்படத்தில் ரஜினியின் கதாபாத்திர பெயர் என்ன என்பதையும் அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also read: வில்லாதி வில்லனாக ரஜினி நடித்த 6 படங்கள்.. பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கிய பாலச்சந்தர்

இந்த அறிவிப்பு போஸ்டர் வைரலானதை தொடர்ந்து தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த சர்ப்ரைஸ் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் இருந்து போஸ்டர் தான் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தற்போது அட்டகாசமான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. வீடியோவின் ஆரம்பத்திலேயே ரஜினி கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அழகாக உடை அணிந்து எங்கோ வெளியில் செல்ல புறப்படுகிறார். வீட்டை விட்டு படு கெத்தாக வெளியே வரும் ரஜினி குனிந்து அங்கு இருக்கும் ஒரு பெரிய கத்தி ஒன்றை உருவிய படி திரும்புகிறார். சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தாடி, கண்ணாடி என்று சூப்பர் ஸ்டார் பார்ப்பதற்கே படுகூலாக இருக்கிறார். இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
To Top