Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்டகாசமான நான்கு புதிய அப்டேட்டுடன் வந்த சன் பிக்சர்ஸ்.. கொண்டாட்டத்தை ஆரம்பித்த ரசிகர்கள்
தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போதைக்கு மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான். என்னதான் சினிமா துறை முடங்கிக் கிடந்தாலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து பல கோடி செலவு செய்து புதிய படங்களை தயாரித்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவரையும் வைத்து ஒரே நேரத்தில் படமெடுக்கும் வல்லமையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தான் உண்டு.
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து நான்கு அறிவிப்புகளை வெளியிட போவதாக தெரிவித்துள்ளனர். அதில் இன்று ஒரு அப்பேட், நாளை ஒரு அப்டேட், வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு அப்டேட் மேலும் வருடத்தின் கடைசி நாளான 31ம் தேதி ஒரு அப்டேட் என குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலும் வருகிற 12-ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் வருவதால் இன்று அண்ணாத்த படத்தின் அப்டேட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் D44 பட அப்டேட் இருக்கலாம் என்கிறார்கள்.
மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை சூர்யா நடிக்கும் சூர்யா40 என்ற படத்தில் அப்டேட் இருக்கலாம். இறுதியாக 31 ஆம் தேதி விஜய், நெல்சன் கூட்டணியில் வரும் தளபதி 65 படத்திற்கான அறிவிப்பாக இருக்கலாம் என தற்போதைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

sun-pictures-update
ஒரே தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து நான்கு வெவ்வேறு முன்னணி நடிகர்களின் பட அறிவிப்புகள் வெளிவருவதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் தற்போது உற்சாகத்தில் இருக்கின்றனர்.
