பொதுவாக ஒரு திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்காக நிறைய விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும் என்பது தற்போது சினிமாவில் எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதற்கு ஏற்றார்போல் பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்தும் மிக பிரம்மாண்டமாக பிரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.
அப்படி ப்ரமோஷன் செய்யப்படும் படவிழாவில் அந்த படத்தில் சம்பந்தப்பட்ட ஹீரோ, ஹீரோயின், தயாரிப்பாளர், இயக்குனர் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதன் மூலம் பட தயாரிப்பாளர்கள் வசூலில் நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அப்படி எந்த ஒரு படத்திற்கும் பிரமோஷன் செய்வதை தவிர்த்து வருகிறது. கடைசியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு கூட ஆடியோ லான்ச் பங்க்ஷனை சன் பிக்சர்ஸ் நடத்தவில்லை.
இதே தான் தற்போது வெளியாக இருக்கும் பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்களுக்கும் சன் பிக்சர்ஸ் பின்பற்றி வருகிறது. ஏனென்றால் படத்தின் பட்ஜெட் எக்கச்சக்கமாக எகிரி போவதுதான் இதற்கு முக்கிய காரணமாம்.
பிரபல முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்கள் என்பதால் படத்தின் செலவும் குறித்த பட்ஜெட்டை தாண்டி விடுவதுதான் சன் பிக்சர்ஸின் இந்த முடிவுக்கு பின்னணியில் இருக்கும் காரணம். மேலும் இயக்குனர்கள் செலவை இழுத்து விடுவதால் இந்தப் படங்களுக்கு சாதாரண பிரமோஷன் மட்டுமே போதுமென்று சன் பிக்சர்ஸ் நிறைய செலவுகளை குறைத்து வருகிறதாம்.
தற்போது சன் பிக்சர்ஸ் திருச்சிற்றம்பலம், சந்திரமுகி 2, விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படம் மற்றும் சூப்பர் ஸ்டாரின் புதிய திரைப்படம் என்று படு பிஸியாக படங்கள் அனைத்தையும் தயாரித்து வருகிறது. அதனால் இந்த திரைப்படங்களுக்கும் அதே பாணியை பின்பற்ற தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.