Tamil Cinema News | சினிமா செய்திகள்
4 படங்களை வைத்து 1000 கோடிக்கு பிளான் போட்ட சன் பிக்சர்ஸ்.. தீபாவளி முதல் 4 மாதங்களும் திருவிழாதான்!
தமிழ் சினிமாவில் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருப்பது சன் பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது. மேலும் அந்த நடிகர்களின் படங்களின் ரிலீஸ் குறித்த முடிவையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுத்துள்ளதாம்.
முதலாவதாக வருகிற நவம்பர் தீபாவளியை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியிருக்கும் அண்ணாத்த படத்தை வெளியிட உள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

annatthe-deepavali-cinemapettai
அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ். நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் பக்கா கமர்ஷியல் படம் இது.

suriya40-cinemapettai
அதனைத் தொடர்ந்து பொங்கலுக்கு அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விஜய்யின் பீஸ்ட் படத்தையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஆனால் இதே தேதியில் இந்தியா முழுவதும் உள்ள முன்னணி நடிகர்களின் பல படங்கள் பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளதால் பீஸ்ட் தள்ளிப் போகவும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

beast-cinemapettai-01
மேலும் பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் என்ற படத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளார்களாம். தனுசுக்கு ஏற்கனவே யாரடி நீ மோகினி, குட்டி போன்ற படங்களை கொடுத்த மித்ரன் ஜவஹர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

thiruchitambalam-shooting-spot-photo
ஆக மொத்தத்தில் இந்த நான்கு படங்களையும் அடுத்தடுத்த மாதங்களில் வெளியிட்டு சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்து நம்பர் ஒன் தயாரிப்பு நிறுவனமாக மாற வேண்டும் என்பதே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்கிறது.
