fbpx
Connect with us

Cinemapettai

கோலிவுட்டின் அடுத்த ஸ்டார் நாயகனுடன் கைகோர்க்கும் சன் பிக்சர்ஸ்?

News | செய்திகள்

கோலிவுட்டின் அடுத்த ஸ்டார் நாயகனுடன் கைகோர்க்கும் சன் பிக்சர்ஸ்?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்த நடிக்க இருக்கும் நாயகன் அஜித்தாக இருக்கும் என சுவாரசிய தகவல்கள் சினிமாத்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நகுல், சுனைனா நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படம் மூலம் சினிமா விநியோகத்தில் இறங்கியது சன் பிக்சர்ஸ். தொடர் விளம்பரங்கள் மூலம் சுமார் படத்தையும் சூப்பராக மாற்றும் டெக்னிக்கை கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படத்தை பிரமாண்டமாகத் தயாரித்தது. தமிழ் சினிமாவில் அதுவரை எந்த படத்திற்கும் கிடைக்காத மிகப்பெரிய வெற்றி எந்திரனுக்கு கிடைத்தது.

தொடர்ந்து, அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகிய மங்காத்தா படத்தை தயாரித்தது. அஜித் சும்மாவே ஆடுவார்கள். இத்தனை விளம்பரம் என்றால் படத்தின் வெற்றி சும்மாவா இருக்கும். அதைப்போலவே, அமோக வெற்றியை பெற்றது. சசிகுமார் நடிப்பில் வெளியாகிய குட்டி புலி படத்திற்கு பிறகு பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமாக வலம் வந்த சன் பிக்சர்ஸ் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு சற்றி அமைதி காத்தது.

தற்போது, விஜய் மற்றும் ரஜினிகாந்த் என ஒரே நேரத்தில் இரண்டு மெகா ஸ்டார்களின் படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62 வது படம். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படப்பிடிப்புகள் 40 சதவீதத்திற்கும் அதிகமாக முடிந்து விட்டது. தற்போது, இப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினிகாந்தின் வில்லனாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

Ajith-Kumar

Ajith-Kumar

இந்நிலையில், அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் கைப்பற்றி இருப்பதாக புதிய தகவல்கள் கோலிவுட்டில் றெக்கை கட்டி இருக்கிறது. விஸ்வரூபம் படத்தில் பிஸியாக இருக்கும் அஜித் அடுத்து நடிக்கும் படமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த, அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட் பட்சிகள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top