Tamil Cinema News | சினிமா செய்திகள்
தன் உயரத்தை கிண்டல் செய்த தொகுப்பாளினிகளுக்கு சூர்யாவின் அதிரடி பதில்.! என்ன துணிச்சல் சூர்யா ரசிகர்களுக்கு.!
சன் மியூசிக் தொலைகாட்சியில் இரண்டு தொகுப்பாளினிகள் சூர்யா உயரத்தை கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதனால் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது எதிர்ப்பு கருத்தினை கூறிவருகிறார்கள்.
இந்த பிரச்சனையால் கோவமாக இருந்த சூர்யா ரசிகர்கள் சிலர் இன்று காலை சன் டிவி அலுவலகம் முன்பு அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தார்கள்.
கே வி ஆனந்த் இயக்கம் படத்தில் சூர்யா 37 படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என கூறுகிறார்கள் அதனால்.
இதை வைத்து சன் மியூசிக் டிவி தொகுப்பாளினிகள் கிசு கிசு நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்துள்ளார்கள் அனுஷ்கா ஹைட்டுக்கு ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு சூர்யா அனால் இப்போ அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும் என கிண்டல் செய்தனர்கள் சூர்யாவை.
இந்த விமர்ச்சனைத்தை பார்த்த சூர்யா ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை கூறினார்கள் அதே போல் திரை பிரபலமான விஷால்,கருணாகரன், இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என அனைவரும் தங்களது கருத்துகளை கூறிவருகிறார்கள்.
அதேபோல் சூர்யா ரசிகர்கள் தங்கள் கைகளில் பேனர் ஏந்தி இன்று காலை சன் டிவி முன்பு கோஷம் எழுப்பினார்கள் சூர்யா ரசிகர்கள்.
இந்த பிரச்சனை சூர்யா காதுக்கு போக தனது சமூக வலைத்தளமான டிவிட்டரில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம் என்று பதிவு செய்துள்ளார்.
தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற. ? #AnbaanaFans
சூர்யாவின் ட்வீட்டுக்கு இடையிடையே விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்கள் மோதிக்கொண்டுள்ளனர்.
