fbpx
Connect with us

Cinemapettai

சொத்துக்கு ஆசைப்பட்டு என்னய்யா டைவர்ஸ் பண்ற.. புது காதலிக்கு மனைவி அனுப்பிய கடிதத்தால் கலங்கி நிற்கும் பிரபல நடிகர்

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

சொத்துக்கு ஆசைப்பட்டு என்னய்யா டைவர்ஸ் பண்ற.. புது காதலிக்கு மனைவி அனுப்பிய கடிதத்தால் கலங்கி நிற்கும் பிரபல நடிகர்

சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் ஒருவர் தான் ஆசை ஆசையாக விரும்பி கல்யாணம் செய்துகொண்ட காதலியை விவாகரத்து செய்த செய்தி தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. சரி, குடும்ப பிரச்சனை காரணமாக ஏதோ நடந்திருக்கும் என அனைவரும் விட்டுவிட்டார்கள்.

ஆனால் அதன்பிறகுதான் அந்த நடிகரின் சுயரூபம் தெரிய வந்துள்ளதாம். பணக்கார பெண்ணை காதலித்ததால் மனைவியை கழட்டிவிட பிளான் பண்ணியுள்ளார் அந்த ஹீரோ. பாவம் அந்த நடிகரின் மனைவி. என்ன காரணத்தினால் டைவர்ஸ் வாங்குகிறார் என்று யோசிக்க கூட நேரம் இல்லாத சமயத்தில் விவாகரத்து வாங்கி விட்டாராம் அந்த நடிகர்.

நடிகரின் புது காதலில் அவ்வப்போது அவரது படங்களுக்கு பைனான்ஸ் வசதி செய்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த நடிகரின் படங்கள் தோல்வி பெற்ற போதெல்லாம் காசு கொடுத்து உதவியுள்ளார். அதுமட்டுமில்லாமல் புதிய காதலியின் பணத்தில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து அனைவரையும் அதிர்ச்சி ஆக்கினார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் கூட படம் தயாரிக்க யோசிக்கையில் சுமாரான வெற்றி படங்களை கொடுத்து விட்டு எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் தயாரிப்பாளராக மாறினார் என அனைவருக்கும் சில காலமாக சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது.

அதற்கெல்லாம் காரணம் அந்த புது காதலிதானாம். எல்லாத்துக்கும் மேலாக அடிக்கடி தன்னுடைய மகனை வைத்து சிம்பதி கிரியேட் பண்ணி கொண்டிருந்தார் அந்த நடிகர். பிளான் பண்ணி கழட்டிவிட்ட கோபத்தில் இருந்த முன்னாள் மனைவி சரியான நேரம் வரட்டும் என காத்துக் கொண்டிருந்தாராம்.

இதுவரை அமைதியாக இருந்த நடிகரின் மனைவி, நடிகரின் போக்கு சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய வேலையை காட்டியாக வேண்டும் என களமிறங்கி விட்டாராம். முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்கும் வகையில் நடிகரைப் பற்றிய ஒரு பெரிய கடிதத்தை எழுதி அந்த புது காதலியின் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டாராம்.

அதைப் படித்துப் பார்த்த அந்த புது காதலியின் பெற்றோர்கள் இவர்கள் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாமல் தடை போட்டுள்ளார்களாம். ஒன்னுமே தெரியாத பூச்சி போல இருந்துவிட்டு இவ்வளவு பெரிய வேலையை செய்து விட்டாரே என மனைவியின் மீது செம கோபத்தில் இருக்கிறாராம் அந்த நடிகர். அதே சமயத்தில் அடுத்ததாக என்ன பண்ணப் போகிறாளோ என கலக்கத்திலும் உள்ளாராம்.

Continue Reading
To Top