சூர்யா படத்தை அட்ட காப்பி அடித்த சுல்தான்.. டீஸரே இவ்வளோ சொதப்பலா என பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

கார்த்திக் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா காமெடி கதாபத்திரத்தில் யோகி பாபு, நெப்போலியன் மற்றும் பொன்னம்பலம் போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.

சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான சுல்தான் படத்தின் டீஸர் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதுமட்டுமில்லாமல் சுல்தான் படத்தில் டீஸரில் இடம் பெற்ற காட்சிகள் அனைத்தும் வேறொரு படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடப்பட்டது.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என்ஜிகே படத்தின் காட்சிகள் அப்படியே சுல்தான் படத்தின் காட்சிகளில் ஒத்து போயுள்ளதாகவும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

sulthan
sulthan

மேலும் என்ஜிகே படத்தில் சூர்யா நடித்திருக்கும் திமிரனும்டா என்ற பாடலில் சூர்யா டிராக்டர் ஓட்டுவது போல் சுல்தானின் கார்த்தி டிராக்டர் ஓடுவதாகவும், அந்த பாடலில் சூர்யா நடனமாடியதை போலவே கார்த்தியின் சுல்தான் படத்தில் நடனமாடி உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான சுல்தான் படத்தின் டீசர் பெரிய அளவிற்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்பது மீம்ஸ் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு பார்த்தாலே தெரிகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்