பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கானுக்கு பலத்த போட்டியாக எப்போதுமே இருப்பவர் சல்மான் கான். ஆனால் தென்னிந்திய மொழிகளில் ஷாருக்கான் அளவிற்கு இவர் பிரபலமானவர் அல்ல.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சுல்தான். உலகம் முழுவதும் 5200 திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ. 41 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.

அதிகம் படித்தவை:  நான் ஈ இரண்டாம் பாகத்தில் சல்மான்கான் - சொல்கிறார் ராஜமௌலி தந்தை

இதன்மூலம் முதல்நாளில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது இந்திய படம் எனும் சாதனையை சுல்தான் படைத்துள்ளது. முதல் இடத்தில் ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் உள்ளது.