
Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனாவின் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது என்ற தகவலை தெரிந்ததும் மீனா செந்திலை கூட்டிட்டு அப்பாவை பார்ப்பதற்கு ஆஸ்பத்திரிக்கு போய் விடுகிறார்கள். அங்கே போனதும் உடம்புக்கு பெருசாக பயப்படற அளவுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஒரு சின்ன ஆஞ்சியோ பண்ணனும் என்று சொல்லிவிடுகிறார்கள்.
இதனால் பயந்து போன மீனாவுக்கு செந்தில் ஆறுதல் சொல்கிறார். அத்துடன் மாமனார் கண்விழித்ததும் இதை நினைத்து பயப்படத் தேவையில்லை. சாதாரணமாக செய்ற மாதிரி தான் இருக்கும் என்று மாமனாரிடமும் சொல்கிறார். இதுவரை செந்திலை கண்டாலே ஆத்திரமடைந்த மாமனார் தற்போது மருமகனை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு செந்திலிடம் சமாதானம் ஆகிவிட்டார்.
அடுத்ததாக பாண்டியன் வீட்டில் உள்ளவர்கள் மீனாவின் அப்பாவுக்கு என்ன ஆச்சு என்று பதட்டமாக இருக்கிறார்கள். உடனே பாண்டியன், செந்திலுக்கு போன் பண்ணி விசாரி என்று சரவணன் இடம் சொல்கிறார். அப்போது சரவணன் பேசிய நிலையில் மீனாவின் அப்பாவுக்கு பரவாயில்லை இந்த பிரச்சனையும் இல்லை பயப்படத் தேவையில்லை என்று சொல்கிறார்.
அதன்பிறகு பாண்டியன் ஓகே நான் கடைக்கு கிளம்புகிறேன் என்று கிளம்பிய நிலையில் தங்கமயிலிடம் நீயும் ஆபீஸ்க்கு போகணும் தானே கிளம்பு என்று சொல்கிறார். அதற்கு தங்கமயில் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் மீனாவின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் பொழுது எப்படி நான் போக முடியும் என்று சொல்கிறார். உடனே கோமதி, அவங்க அப்பாக்கு தான் இப்ப எந்த பிரச்சினையும் இல்லை.
அப்படியே ஏதாவது உதவி தேவைப்பட்டால் நான் கூட இருந்து பார்த்துக் கொள்கிறேன், நீ ஆபீசுக்கு கிளம்பு முதல் நாளை இப்படி லீவு போட்டால் நல்லா இருக்காது என்று கோமதி சொல்கிறார். உடனே பாண்டியன், சரவணனிடம் தங்கமயிலை கூட்டிட்டு ஆபீஸில் விட்டுட்டு வா என்று சொல்கிறார். ஆனால் தங்கமயில் சமாளிக்க முடியாமல் சரவணன் உடன் கிளம்பி போய்விடுகிறார்.
போகும் போது ஒரு ஆபீசை காட்டி இதுதான் என்னுடைய ஆபீஸ் நான் இறங்கி கொள்கிறேன் என்று சொல்லி சரவணனுக்கு டாட்டா காட்டி விடுகிறார். அதன் பிறகு தங்கமயில் அந்த ஆபீஸில் செக்யூரிட்டி இடம் நான் 12 ஆவது வரை படித்திருக்கிறேன். எனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று கேட்கிறார். அதற்கு வெளியில போ மா என்று செக்யூரிட்டி அனுப்பி விடுகிறார்.
அதன் பிறகு தங்கமயிலுக்கு எங்கே போவது என்று தெரியாத நிலையில் பார்க்குக்கு சென்று சாப்பிட்டு தூங்கி நேரத்தை செலவிடுகிறார். அடுத்து மனைவியை பிக்கப் பண்ண சரவணன் ஆபீஸ்க்கு போகிறார். இது தெரிந்த தங்கமயில் ஆபீஸ் வாசலுக்கு வந்து விடுவார். ஆனால் எத்தனை நாள் ஓட்டப் போகிறார் எப்பொழுது உண்மை தெரியும் என்பது தெரியவில்லை.
பாவம் பொண்ணுக்கு கல்யாணம் ஆக வேண்டும் என்று ஆசையில் பல பொய்களை சொல்லி மகளை பாண்டியன் வீட்டில் மருமகளாக ஆகிவிட்டார். ஆனால் அங்கே போனதுக்கப்புறம் தங்கமயில் ஒவ்வொரு நாளும் அவஸ்தைபட்டு தான் வருகிறார். அடுத்ததாக குமரவேல் மற்றும் அரிசி பேசிக் கொள்வதை சுகன்யா பார்த்து விடுகிறார். அந்த வகையில் நேரடியாக சக்திவேலுவிடம் அரசியை வைத்து அந்த குடும்பத்தை பழிவாங்க திட்டம் போட்டு இருப்பது போல் தெரிகிறது.
எல்லாத்தையும் நான் கவனித்தேன், ஆனாலும் பயப்படத் தேவையில்லை. நான் அரசி மனசை வீட்டிற்குள் இருந்து களைச்சு நீங்க நினைத்த பிளானை வெற்றிகரமாக செய்து தருகிறேன் என்று சக்திவேல் இடம் டில் பேசி விட்டார். இன்னும் இந்த சுகன்யாவால என்னென்ன கூத்தெல்லாம் நடைபெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.