Connect with us
Cinemapettai

Cinemapettai

bhakiyaraj-munthanai-mudichu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாக்யராஜுக்கு குழந்தையாக நடித்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.. இந்த விஷயம் தெரியாம போச்சே!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரசிகர்களை கவர்ந்த கேரக்டர் தான் அந்த குழந்தை நட்சத்திரம். இவர் தமிழை தவிர மலையாளம், தெலுங்கு சீரியல்களிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு பல மொழிகளில் ரசிகர்கள் உண்டு.

சுஜிதா தன்னுடைய சிறுவயதிலேயே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர் சிவாஜி காலத்திலிருந்தே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அஜித்தின் வாலி படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார். இந்நிலையில் பாக்யராஜின் சூப்பர் ஹிட் படத்தில் பாக்யராஜின் மகனாக சுஜிதா நடித்துள்ளார்.

பாக்யராஜ் இயக்கத்தில் ஊர்வசி, பாக்கியராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இப்படத்தில் இடம்பெறும் முருங்கைகாய் காட்சிகள் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இப்படத்தில் பாக்யராஜின் மகனாக ராஜா என்ற குழந்தை கதாபாத்திரத்தில் சுஜிதா நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்த சத்யராஜ் நடிப்பில் வெளியான பூவிழி வாசலிலே படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தையாகவும் சுஜிதா நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே சுஜிதா தனது திறமையான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார்.

தற்போதும் சுஜிதா வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்து வருகிறார். ஆனாலும் வெள்ளிதிரையை விட சின்னத்திரையில் தான் இவரை மிகவும் பிரபலமாக்கியது. இதனால் சுஜிதா தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் போல இதே கதை களத்துடன் தெலுங்கில் வாடினம்மா என்ற சீரியலில் சீதா மகாலட்சுமி ஆக சுஜிதா நடித்து வந்தார். தற்போது இத்தொடர் இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும், யூடியூபில் கதை கேளு கதை கேளு என்ற சேனலும் சுஜிதா நடித்து வருகிறார்.

Continue Reading
To Top