Politics | அரசியல்
வீசிய தூர்நாற்றம்.. குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர் அஜித்குமார் சொல்லியது என்ன?
சுஜித்தை மீட்கும் பணியில் நேற்று கடைசி கட்டத்தில் என்ன நடந்தது என்பதை இப்போது பார்ப்போம்.
65 அடி ஆழத்திற்கு குழி தோண்ய பிறகு தீயணைப்பு வீரர் அஜித்குமார் என்பவர் நேற்று இரவு 9.55க்கு சுரங்கத்திற்குள் சென்று சோதனை செய்தார். உள்ளே சென்று சிறுவனை மீட்க முடியுமா? உள்ளே பாறைகள் எப்படி இருக்கிறது, உடலில் குத்துமா என்று பார்க்க என்பதை அவர் பார்த்தார் உடலில் கயிறு கட்டி படிகள் மூலம் குழிக்குள் இறங்கினார்.
குழிக்குள் இறங்கிய அஜித்குமார் 15 நிமிடங்களுக்கு பிறகு வெளியே வந்து சேர்ந்தார். உள்ளே இருந்து பாறை மாதிரியை அவர் கொண்டுவந்தார் இதையடுத்துதான் மேலும் குழி தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டது. உள்ளே பாறைகள் கடுமையாக இருக்கிறது என்று பாறை மாதிரி மூலம் தெரியவந்தது.
மேலும் கிடைமட்டமாக சுரங்கம் அமைப்பது கடினம். அப்படி அமைக்க வேண்டும் என்றால் மேலும் 8 மணி நேரம் கூட ஆகும் என்று அஜித்குமார் கூறியதாக கூறப்படுகிறது. அதேபோல் உட்பகுதியில் இறங்கி மீட்பது கொஞ்சம் கடினம் என்றும் அஜித் குமார் கூறியதாக கூறப்படுகிறது. இதன்பின் சுஜித்தின் உடல் எப்படி இருக்கிறது என்று குழாய் வழியே பார்க்கப்பட்டது.
ஏர் லாக்கில் 88 அடியில் சுஜித் உடல் இருந்தது. அந்த உடல் சிதிலம் அடைந்து, ரத்த காயங்களுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவர்களும் அவரின் ஜூம் செய்யப்பட்ட புகைப்படத்தை பார்த்து உறுதி செய்தனர். மேலும் சுஜித் இருந்த குழியில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது.
தீயணைப்பு வீரர் அஜித்குமார் சொன்னது மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை இரண்டையும் வைத்து மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு, சுஜித் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் சுஜித் உடல் ஆழ்துளை கிணற்றின் வழியாகவே மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
