News | செய்திகள்
நடிகர் திலகம் குடும்பத்திற்கு மருமகளாகும் சுஜா வருணி…
நடிகை சுஜா வருணியை திருமணம் செய்து கொள்ள இருக்கும் அவரது காதலன் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

suja varunee
14 வயதில் சினிமாத்துறையில் நுழைந்த சுஜா வருணி இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். நாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார். இதை தொடர்ந்து, சுஜா சமீபகாலமாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள ரோலை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் சமுத்திரக்கனியின் ஆண் தேவதை ஆகிய படங்களில் விரைவில் வெளிவர இருக்கிறது. பல வருடமாக சினிமாவில் இருந்தாலும், சுஜாவின் நடிப்புக்கு இன்னும் சரியான தீனி கிடைக்கவில்லை என்பது மட்டும் உண்மை.
தொடர்ந்து, கடந்த வருடம் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் தமிழின் முதல் சீசனில் கலந்து கொண்டார். பாதியில் வந்ததால் இவருக்கும் நிகழ்ச்சியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இவரின் சில செயல்கள் ஓவியாவை போல இருந்ததாகவும் போட்டியாளர்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், ஒரு டாஸ்கில் வெற்றி பெற வேண்டும் என போராடியதாக இருக்கட்டும். வீட்டு வேலைகளை செய்வதாக இருக்கட்டும். இவருக்கும் நிகர் இவர் தான் என்பதை பலரும் மறுக்கவே இல்லை. இப்போட்டியில், சுஜா, சிவா என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அடிக்கடி கூறி வந்தார். கமல்ஹாசன் வீட்டுக்குள் வந்த போது கூட அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் யார் என்பது மட்டும் ரசிகர்களுக்கு தெரியவே இல்லை.

suja varuni
இந்நிலையில், சுஜா தனது காதலனை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை. கோலிவுட்டின் தூண் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார் தான். இவர் சிவாஜியின் மூத்த மகன் ராம் குமாரின் இரண்டாவது மகன். கோலிவுட்டின் பிரபல நடிகர் விக்ரம் பிரபுவின் சகோதரரும் ஆவார். சிவக்குமாரும் சிங்கக்குட்டி, புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில், சுஜா திருமணம் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.
