sudeepலிங்கா படத்திற்கு பிறகு இயக்குனர் K.S.ரவிகுமார் இயக்கியுள்ள படம் முடிஞ்சா இவனப் புடி. இப்படத்தில் நான் ஈ சுதீப் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ளது. D.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஏப்ரில் 8ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஏப்ரல் 14 ம் தேதி இளையதளபதி விஜய் நடிக்கும் தெறி படம் ரிலீஸ் ஆவதால் அதற்கு முந்தைய வாரம் இப்படத்தை ரிலீஸ் செய்ய இயக்குனர் K.S.ரவிகுமார் விரும்புகிறாராம். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.