பாலிவுட் நடிகை சோனம் கபூர் – தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா ஜோடியின் திருமணம் மும்பையில் பிரமாண்டமாக நடந்தது.

கபூர் குடும்பத்தின் முக்கியமான நடிகையாகக் கருதப்படுபவர் சோனம் கபூர். பாலிவுட்டில் மிகவும் நேர்த்தியாக உடையணியும் நடிகையாகக் கருதப்படும் சோனம் கபூர், கடந்த 4 ஆண்டுகளாக தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவைக் காதலித்து வந்தார். ஆனால், இவர்கள் குறித்த கிசுகிசுக்கள் மீடியாக்களில் வெளியாகி வந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மீடியாக்களிடம் பேச மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவந்தார். இந்த தகவலை உறுதிப்படுத்தாமல் இருந்துவந்த அவர், சமீபத்தில்தான் காதலருடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

அதிகம் படித்தவை:  இந்திய சினிமாவின் மோசமான படம், நடிகர், நடிகை யார்? கருத்துகணிப்பில் தகவல்

அதன் பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் மும்பையில் இன்று திருமணம் நடந்தது. பாந்த்ரா பகுதியில் உள்ள சோனம் கபூரின் உறவினர் வீட்டில் திருமணம் நடந்தது. மும்பை லீலா பேலஸ் ஹோட்டலில் மாலையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. திருமண நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், அர்ஜூன் கபூர், மறைந்த ஸ்ரீதேவியின் குடும்பத்தினர், சயீப் அலிகான், கரீனா கபூர், ஜாக்குலின் பெர்ணாண்டஸ் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டுள்ளது.

அதிகம் படித்தவை:  அணிந்து வந்த உடையால் சங்கடத்தில் மாட்டிக்கொண்ட சோனம் கபூர் - வீடியோ உள்ளே !

திருமணத்துக்கு முன்பாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியையும் கபூர் குடும்பத்தினர் மிகவும் விமரிசையாக நடத்தினர். திருமணம் முடிந்த கையோடு ஏற்கெனெவே ஒப்புக்கொண்ட படங்கள், நிகழ்ச்சிகள் என சோனம் கபூர் 5 அல்லது 6 மாதங்களுக்கு பிஸி என்பதால், நவம்பரில் ஹனிமூனைத் திட்டமிட்டிருக்கிறது இந்த ஜோடி. சோனம் கபூருக்கு, அவரது கணவர் ஆனந்த் அஹுஜா விதித்த ஒரே ஒரு கண்டிஷன், `பெட்ரூமில் இருவருமே மொபைல் போனைப் பயன்படுத்தக் கூடாது’ என்பதுதனாம்.