fbpx
Connect with us

திடீரென கூட்டப்பட்ட விஜய் மக்கள் இயக்க கூட்டம்.. தீயாய் பரவும் தளபதியின் புகைப்படங்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திடீரென கூட்டப்பட்ட விஜய் மக்கள் இயக்க கூட்டம்.. தீயாய் பரவும் தளபதியின் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் தளபதி என்ற பட்டத்தோடு கெத்தாக இருப்பவர்தான் தளபதி விஜய். இவர் தனது இயல்பான நடிப்பினாலும் அயராத உழைப்பினாலும் தமிழ் மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளார்.

இந்நிலையில் தளபதி விஜய் திடீரென பல்வேறு மாவட்டங்களில் உள்ள தன்னுடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் விஜய் அரசியலில் குதிக்கப் போகிறாரா என்ற சந்தேகம் அவருடைய ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

ஆனால் விஜய் நிர்வாகிகளை சந்தித்ததன் காரணம் வேறு. அதாவது தமிழகத்தில் புதிதாக கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாகி இருப்பதால், அந்தந்த மாவட்டங்களுக்கான மக்கள் இயக்க நிர்வாகிகளை  நியமிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப் பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது விஜய் தன்னுடைய ரசிகர் மன்றங்களை எல்லாம் ஒருங்கிணைத்து விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்து வருகிறார்.

மேலும் இந்தக் கூட்டத்தில் விஜய் தனது நிர்வாகிகளுக்கு, செய்யும் தொழிலை கவனமாக செய்ய வேண்டும் என்றும், பெற்றோரை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.

இறுதியாக விஜய், மக்களுக்கான உதவிகளை செய்ய கடன் வாங்க வேண்டாம் என்றும், தன்னிடம் இருந்து உதவிகள் வந்து சேரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

thalapathy-vijay-makkal

thalapathy-vijay-makkal

இவ்வாறு இருக்க, ‘இத்தனை நாளா தளபதி தரிசனம் கிடைக்காதா என ஏங்கிட்டு இருந்த ரசிகர்கள், ஏதோ ஒரு வகையில தளபதி போட்டோ பார்க்கவாச்சும் வாய்ப்பு கிடைச்சிருக்கே’ என எண்ணி, இந்த போட்டோவை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top