fbpx
Connect with us

சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா கணவருக்கு இப்படி ஒரு நோயா?

News / செய்திகள்

சுசிலீக்ஸ் புகழ் சுசித்ரா கணவருக்கு இப்படி ஒரு நோயா?

பாடகி சுசித்ரா கணவருக்கு ஆபத்தான நோய் இருப்பதாக பரப்பப்பட்ட தவறான தகவலுக்கு அவரது கணவர் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

Suchitra

Suchitra

பாடகி சுசித்ராவை தெரியாதவர்களுக்கும், சுசிலீக்ஸை தெரியாமல் இருக்காது. இப்போது தான் ஸ்ரீலீக்ஸ்லாம். கோலிவுட் இதற்கெல்லாம் ஒரு வருடம் சீனியருங்கோ. பாடகி சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து நாயகிகளின் அந்தரங்க வீடியோக்கள், படங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன. சுசித்ராவின் கணக்கை யாரோ ஹேக் செய்து விட்டார்களோ என நினைத்து கொண்டு இருக்க, இல்லை இல்லை நான் தான் என அவர் தன் புகைப்படங்கள் மூலம் உறுதிப்படுத்தினார்.

இதை தொடர்ந்து, இந்த தேதியில் இவர்கள் அந்தரங்க படம் வெளியிடப்படும் என ஒரு பட்டியலும் வெளியிடப்பட்டது. இதனால், சமூக வலைத்தளத்தில் தீ பற்றிக்கொண்டது. கோலிவுட்டே ஆடித்தான் போனது. தொடர்ந்து, அடுத்த நாளே, அவர் கணக்கு டிஆக்டிவேட் செய்யப்பட்டது. கணவருடன் சென்று காவல்துறையில் என் கணக்கை யாரோ பயன்படுத்துவதாக புகார் தெரிவித்தார். இதலெல்லாம் ஓய்ந்து முடிந்து போன கதைனு தானே கேட்குறீங்க. இல்லை இல்லை ஒரு புதுத்தகவலும் இருக்கிறது.

Suchitra-

Suchitra

சுசித்ராவின் கணவருக்கு கேன்சர் இருப்பதாக அவரது விக்கீபிடியா பக்கத்தில் ஒரு தகவல் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதை பார்த்த பலரும் அவரிடம் ஆறுதல் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் கடுப்பான கார்த்திக், டுவிட்டரில் ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், யாரோ என் விக்கீபிடியா பக்கத்தில் எனக்கு கேன்சர் இருப்பதாக அப்டேட் செய்து இருக்கிறார்கள். கேன்சருனு பதிவு செஞ்சதுக்கு ஆஸ்காருன்னு மாற்றி பதிவு செய்திருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பேன் என எரிச்சலாக தெரிவித்து இருக்கிறார்.

கார்த்திக்கும் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர். யாராடி நீ மோகினி, பசங்க 2, அலைபாயுதே, வெப்பம், பொய் சொல்ல போறோம், கண்ட நாள் முதல் உள்ளிட்ட சில படங்கள் இவரின் திரை வாழ்வில் முக்கிய படங்களாக அமைந்தன. இவர் 2005ம் ஆண்டு பாடகி சுசித்ராவை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top