Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன்.. முடிஞ்சா அவர அனுப்புங்க! சர்ச்சையை கிளப்பிய சுசி லீக்ஸ்
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக ஏற்கனவே விஜே அர்ச்சனா சென்றிருக்கும் நிலையில் தற்போது அடுத்த என்ட்ரியாக பாடகி சுசித்ரா பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள ட்வீட் பிக்பாஸ் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் பெயர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் கசிந்தது.
அந்த வகையில் வைல்டு கார்டு என்ட்ரியாக சுஜித்ரா இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் வீட்டில் உள்ள செல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் திடீரென சுசித்ரா வெளியிட்டுள்ள பதிவு பிக்பாஸ் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏனெனில் சுசித்ரா வெளியிட்டுள்ள பதிவில், தான் கௌதம் வாசுதேவ் மேனனின் பெரும் ரசிகை என்றும், வைல்டு கார்டு என்ட்ரியாக தான் போகவில்லை என்றால் கூட அவர் கண்டிப்பாக போக வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சுசித்ரா.
எனவே பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் சுசித்ராவின் வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த நிலையில், சுஜித்ரா தற்போது போட்டிருக்கும் ட்வீட் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் காண்டான நெட்டிசன்கள், ‘நீங்க பிக்பாஸ் வீட்டுக்கு போறீங்களா இல்லையான்னு சொல்லுங்க. மத்தவங்கள பத்தி பேசுவதை நிறுத்துங்க’ என ஏட்டிக்கு போட்டியாய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

gautham-menon-cinemapettai
