பிரியங்கா எப்படிப்பட்ட பொம்பளைன்னு அவ எக்ஸ் புருஷன்கிட்ட கேளுங்க.. பகிரங்கமாக வீடியோ வெளியிட்ட சுசித்ரா

VJ Manimeghalai: இன்னைக்கு பொழுது விடிஞ்சதிலிருந்தே பிரியங்கா, மணிமேகலை பஞ்சாயத்து தான். அஜித்தா, விஜயா என போட்டி போட்டுக் கொண்டிருந்த நெட்டிசன்கள் எல்லாம் இப்போது மாறி மாறி மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விஷயத்தில் பிரியங்கா பக்கம் அதிக டேமேஜ் என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர்களை தாண்டி பாடகி சுசித்ரா மணிமேகலைக்கு சப்போர்ட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். சுசித்ரா வாயை திறந்தாலே சர்ச்சை தான் என்பது எல்லோருக்குமே தெரியும்.

வீடியோ வெளியிட்ட சுசித்ரா

அதைத்தான் மீண்டும் செய்திருக்கிறார். தான் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் சுசித்ரா தன்னுடைய முழு ஆதரவை மணிமேகலைக்கு தெரிவித்திருக்கிறார். இது போன்ற சூழ்நிலையில் இருந்து வெளிவந்து என்ன நடந்தது என்பதை சொல்வதற்கு ஒரு பெரிய தைரியம் வேண்டும்.

அதற்காகவே மணிமேகலையை பாராட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த விஷயத்தில் பிரியங்கா தரப்பில் தான் தவறு இருக்கும் என்பதையும் சொல்லி இருக்கிறார். பிரியங்கா எப்படிப்பட்ட பொம்பளைன்னு அவருடைய முன்னாள் கணவரிடம் கேட்டுப் பாருங்கள்.

அந்த பையன் என்னோட தம்பி பையன் தான். ரொம்பவும் நல்ல பையன். பிரியங்காவால் அவனுடைய வாழ்க்கையே நாசமாகிவிட்டது. தற்போது தனக்கான நல்ல துணையைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறான்.

பிரியங்காவை பொறுத்த வரைக்கும் அவர் செய்வது ‘Mother Queen Narcassitics’ வகையை சேரும். அதாவது இத்தகைய குணம் கொண்டவர்கள் மற்றவர்கள் மீது அதீத அன்பு செலுத்துவார்கள். அந்த அன்பு எப்படிப்பட்ட அன்பு என்றால் அதன் மூலம் அந்த நபர்களை தங்களுக்கு அடிமையாக வைத்திருக்கும் அளவுக்கானது. அந்த ரகத்தை சேர்த்தவர் தான் பிரியங்கா என சுசித்ரா தன்னுடைய வீடியோவில் சொல்லி இருக்கிறார்.

பிரியங்கா மனசு வச்சா தான் விஜய் டிவியில் இருக்க முடியும்

- Advertisement -spot_img

Trending News