தனுஷை கோழி அமுக்குற மாதிரி தான் ஐஸ்வர்யா அமுக்குனாங்க, அப்பவே வேண்டாம்னு சொன்னேன்.. ரஜினி வீட்டு ரகசியத்தை சொன்ன சுசித்ரா

Dhanush: பாடகி சுசித்ரா எப்போ பேட்டி கொடுத்தாலும் தமிழ் சினிமாவில் பெரிய புயல் தான் அடிக்கும். தற்போது மீண்டும் அப்படி ஒரு சூறாவளி காற்றே தான் சுழன்ற விட்டு இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தனுஷை எவ்வளவு நார் நாராக கிழிக்க முடியுமோ கிழித்து தொங்க விட்டார்.

தற்போது அவருடைய டார்கெட் தனுஷின் முன்னாள் மனைவி மற்றும் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்தை பற்றி பேசி இருக்கிறார் சுசித்ரா.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் போன்ற படங்களில் தன்னுடைய சினிமா கேரியரை தனுஷ் ஆரம்பிக்கும்போதே ரஜினி மகளுடன் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது என பேசப்பட்டது. அது எப்படி ரஜினி, தனுஷுக்கு தன்னுடைய பெண்ணை கட்டி வைப்பார் என்றெல்லாம் சந்தேகம் இருந்தது.

ஆனந்த விகடன் பத்திரிக்கை ஒன்றில் பேட்டி அளித்த தனுஷ் தனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையில் எந்த ஒரு உறவும் இல்லை என்று சொன்னார். அந்த பத்திரிக்கை வெளிவந்த அடுத்த வாரமே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியானது.

ரஜினி வீட்டு ரகசியத்தை சொன்ன சுசித்ரா

அதன் பின்னர் தன்னுடைய அக்காவின் நெருங்கிய தோழிதான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இதன் மூலம் தான் எங்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது என தனுஷ் பேட்டி கொடுத்திருந்தார். ஐஸ்வர்யா உடனான திருமணத்திற்கு பிறகு தனுஷின் சினிமா கேரியர் அடுத்தடுத்து உச்சத்தை அடைந்தது.

தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரானார் தனுஷ். அதுமட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் படங்களில் நடித்து ஹாலிவுட் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த தம்பதிகளுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் 18 வருட திருமண உறவை முறித்துக் கொள்வதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது குறித்து தற்போது பேசிய பாடகி சுசித்ரா கார்த்திக் குமாரை திருமணம் செய்வதற்கு முன்பே தனுஷ் என்னுடைய நெருங்கிய நண்பர் என சொல்லி இருக்கிறார்.

அவர் ஒரு சிறந்த நடிகர், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என சொன்ன சுசித்ரா, தனுஷை நிறைய விஷயங்களில் உரிமையாக நான் திட்டி இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார். காதல் கொண்டேன் ரிலீஸ் ஆன சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுக்கு பொக்கே ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

தனுஷ் இதை சுசித்ராவிடம் சொன்னதாகவும், ரஜினிகாந்த்தை தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் சொல்லி இருக்கிறார். அதற்கு சுசித்ரா தயவு செய்து இதையெல்லாம் நம்பாதே, வளர்ந்து வரும் ஹீரோக்களை அமுக்குவதற்காக நடைபெறும் விஷயம் இது.

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் இப்படித்தான் செய்வார் என சொல்லி இருக்கிறார். அதற்கு தனுஷ் ரஜினி பொக்கே அனுப்புனா தானே நம்ம இத பத்தி எல்லாம் யோசிக்கணும், ஆனா அவர் பொண்ணு தான அனுப்பி இருக்காங்க. நான் அவங்கள திருமணம் செஞ்சுக்க தான் போறேன் என சுசித்ராவிடம் சொல்லியதாக இந்த பேட்டியில் அவர் சொல்லி இருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News