Connect with us
Cinemapettai

Cinemapettai

ramya-suresh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஓட்ட தக்காளியை வைத்து கொளுத்திப்போட்ட ரம்யா பாண்டியன்.. ஆம்பள, பொம்பளன்னு பார்க்க மாட்டன் என கிழித்த மொட்ட அங்கிள்

பிரபல ரேடியோவில் ஆடியோ ஜாக்கியாக பணிபுரிபவர் தான் சுசித்ரா. இவர் நேற்று முன்தினம் பிக் பாஸ் 4 வீட்டில் கன்டஸ்டன்ட் ஆக கால்பதித்தார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் சுசித்ராவுக்கும் சுரேஷுக்கும் கிச்சன் ஏரியாவில் சண்டை வெடித்தது பிக்பாஸ் ரசிகர்கள் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஏனெனில் நேற்றுமுன்தினம் எபிசோடில் என்ட்ரி ஆன சுசித்ரா வந்ததும், சுரேஷ் சக்ரவர்த்தியை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் பேண்டேஜ் ஒட்டியபடி இருக்கும் ஸ்மைலியை கொடுத்து  நீங்க பழைய ஃபார்முக்கு வரணும் என்று கூறினார் சுச்சி.

இப்படி இருக்க, நேற்றைய எபிசோடில் கிச்சனில் சமையல் செய்து கொண்டிருந்தபோது ரம்யா, ‘தாத்தா இந்த தக்காளி ஏதோ மாதிரி இருக்கு. இதை வச்சு ஏதாச்சு செய்ய முடியுமா?’ என சுரேஷிடம் கேட்டார். அதற்கு சுரேஷ், ‘வை நான் தொக்கு செய்து தருகிறேன்’ என்று கூறினார்.

இதற்கு சம்பந்தமே இல்லாமல் சுசித்ரா, ‘இது ரொம்பவே கெட்டுப் போய் இருக்கு. வந்து பார்த்துட்டு சொல்லுங்க’ என்று காட்டமாக சுரேஷிடம் பேசினார்.

இதனால் கோபம் அடைந்த சுரேஷ் கேப்டனிடம் சென்று, ‘நான் ரம்யாவுக்கு பதில் சொன்னேன். அதுக்கு சுசித்ரா என்கிட்ட கத்துறாங்க. இது சுசித்ராக்கு முதல் வார்னிங்.. ரெண்டு, மூணு வார்னிங் கொடுப்பேன்.

அதுக்கப்புறம் வண்ட வண்டயா கேட்பேன். தடுக்க யாராச்சும் வந்தா ஆம்பள பொம்பளன்னு பார்க்க மாட்டேன்’ என்று விளாசியுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், ‘பிக்பாஸ் மறுபடியும் சூடு பிடிக்கத் தொடங்கிருச்சு’ என்று ஆனந்தக் கூத்தாடுகின்றனர்.

suresh-big-boss

suresh-big-boss

Continue Reading
To Top