இளைய தளபதி விஜய் தன் தங்கை மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரின் இழப்பு தான் விஜய்யை இத்தனை அமைதியாக்கியது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தந்தை இதுக்குறித்து உருக்கமாக சில கருத்துக்களை பேசியுள்ளார்.

இதில் இவர் ’விஜய்க்கு தன் தங்கை வித்யா தான் உலகம், எப்போது தன் தங்கையை தலையில் தூக்கி சுற்றி விளையாடுவார்.

அதிகம் படித்தவை:  மெர்சலுடன் இணையும் எங்கள் ட்ரைலர்! இயக்குனரின் சந்தோசம்..

வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும். வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் எங்களை விட்டு போனது.

அதிகம் படித்தவை:  தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு?

ஒருநாள் விஜய் அருகிலேயே கொஞ்சம் கொஞ்சமாக வித்யா மூச்சு திணறியடிபடி இறந்தார், அன்று விஜய் ‘அப்பா..னு’ கதறி அழுத்ததை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை’ என மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.