தமிழில் கேங்ஸ்டர் கதைகள் மூலம் மிரட்டிய 6 ஹீரோக்கள்.. இதில் 5 படங்களில் அதிரடி காட்டிய அஜித்

தமிழ் சினிமாவில் மிக குறைவான அளவே கேங்ஸ்டர் படங்கள் வெளியாகிறது. இந்தப் படங்களால் நடிகர்கள் மாஸ் ஹீரோவாக காட்டப்படுகிறார்கள். அந்த வகையில் ரஜினி, அஜித், தனுஷ், விக்ரம், விஜய், அர்விந்த் சுவாமி என பல ஹீரோக்கள் நடித்த கேங்ஸ்டர் படங்களைப் பார்க்கலாம்.

தளபதி: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தளபதி. புராணக் கதையில் கர்ணன், துரியோதனன் நட்பை நம் கண் முன்னே கொண்டு வர தேவா, சூர்யா கதாபாத்திரத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் ஹீரோவாக காட்டிய படம் தளபதி.

பாட்ஷா: இப்படத்தில் ஆட்டோ ஓட்டுனர் மாணிக்கமாகவும், மும்பை தாதா பாட்ஷாவாகவும் ரஜினி மாஸ் காட்டியிருந்தார். இப்படத்தில் பாட்ஷா அளவிற்கு, மார்க் ஆண்டனி கதாபாத்திரமும் வலிமை வாய்ந்ததாக அமைந்திருந்தது. இப்படத்தில் ரஜினியின் ஸ்டைலும், இடம்பெற்ற வசனங்களும் ரசிகர்களை கவர்ந்தது.

அமர்க்களம்: அமர்க்களம் படத்தில் ரவுடியாக உள்ள அஜித், நாசரின் மகள் ஷாலினி கடத்துகிறார். பின்பு அஜித், ஷாலினி இடையே காதல் மலர்கிறது. பின்பு ரகுவரனின் மகள் தான் ஷாலினி என்பது தெரியவருகிறது. இதைத்தொடர்ந்து போலீசுக்கும், ரவுடிகளுக்கு இடையே சிக்கும் அஜித்துக்கு என்ன நேர்ந்தது என்பது அமர்க்களத்தில் கதை.

தீனா: இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இன் முதல் படம் தீனா. காதல் பாதையிலிருந்து ஆக்ஷன் பாதைக்கு அஜித்தை மாற்றிய படம். தீனா படத்தின் மூலம் தான் அஜித்திற்கு தல என்ற பெயர் வந்தது. அஜித்துக்கு ரசிகர் பட்டாளத்தை தந்த தீனா படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஜெமினி: சரண் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ஜெமினி படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. இப்படத்தில் ரவுடியாக இருக்கும் விக்ரம் கிரணுடன் ஏற்படும் காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. அத்துடன் இப்படத்தில் இடம் பெற்ற ஓ போடு பாடல் மிகப் பெரிய ஹிட்டானது.

அட்டகாசம்: சரண் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் அட்டகாசம். தாதாவாக இருக்கும் ஒரு அஜித் மற்றும் அப்பாவியாக உள்ள அஜித் இவர்கள் இருவரின் இடமாற்றத்தால் என்ன நடக்கிறது என்பதே அட்டகாசம் படத்தின் கதை.

புதுப்பேட்டை: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் புதுப்பேட்டை. ஒரு சாமான்ய ஏழைச் சிறுவன் அவன் விருப்பம் இல்லை என்றாலும் கேங்ஸ்டர் தொழிலுக்குத் எப்படி தள்ளப்படுகிறான். அதற்குப் பின்பு அவன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே புதுப்பேட்டை.

பில்லா: அஜித், நயன்தாரா, பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் பில்லா. அஜித் திரையுலகப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் பில்லா. இன்டர்நேஷனல் டானாக அஜித் தனது ஸ்டைலிஷான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.

மங்காத்தா: வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடைசி வரை அஜித் மற்றும் ஆக்சன் கிங் நண்பர்கள் என்பது தெரியாமலேயே ஆடுபுலி ஆட்டம் போல் கதை நகரும். இப்போது கூட இந்த படத்தை ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தலைவா: ஏஎல் விஜய் இயக்கத்தில் 2013ல் வெளியான திரைப்படம் தலைவா. இப்படத்தில் விஜய், அமலாபால், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தார்கள். இளமை துள்ளலுடன் டான்ஸ் ஸ்கூல் நடத்திவரும் விஜய் சந்தர்ப்பவசத்தால் மும்பையின் தாதா தலைவராக வாழ்கிறார்.

கபாலி: பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் கபாலி. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்சிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஜான் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர். மலேசியாவில் வாழும் தமிழர்கள் அடிமையாக வாழ்கிறார்கள். அவர்களை எப்படி ரஜினி மீட்கிறார் என்பதே கபாலியின் கதை.

வட சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. தன்னை கை தூக்கி விட்டதோடு, ஊருக்கும் நல்லது செய்யும் நல்ல தாதாவாக உள்ள அமீரை கொன்ற அவரது நம்பிக்கைத் துரோகி கையாட்களை கொல்லும் இளம் தாதாவாக தனுஷ் நடித்து இருந்தார்.

செக்கச் சிவந்த வானம்: அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய்சேதுபதி, ஜோதிகா, அதிதிராவ் ஹைதரி, டயானா எரப்பா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா என பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் செக்கச் சிவந்த வானம். ஒரு கேங்ஸ்டர் குடும்பத்தில் வாரிசு சண்டை வருகிறது. இதனால் அவர்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் கொன்று கொள்கிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்