பாக்யராஜ் இயக்கத்தில் வெள்ளிவிழா கண்ட 7 படங்கள்.. கண்டிப்பாக பார்க்க மிஸ் பண்ணிடாதிங்க

தமிழ் சினிமாவில் நடிகர், திரைக்கதை அமைப்பாளர், வசன எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் தான் நடிகர் பாக்கியராஜ். இயக்குனர் பாரதிராஜாவிடம் சிறிது காலம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் பாக்கியராஜ் இயக்கிய வெற்றி படங்களை பார்க்கலாம்.

அந்த 7 நாட்கள்: பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அந்த 7 நாட்கள். பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில், குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்களைக் கொண்டு இயல்பான திரைக்கதை அமைந்திருந்தது. இப்படத்தில் பாக்கியராஜ் பாலக்காட்டு மாதவன் கதாபாத்திரத்திலும், அம்பிகா வசந்தி கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

antha 7 naatkal
antha 7 naatkal

டார்லிங், டார்லிங், டார்லிங்: 1982 பாக்யராஜ் இயக்கி நடித்து வெளியான திரைப்படம் டார்லிங் டார்லிங் டார்லிங். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூர்ணிமா நடித்திருந்தார். இப்படத்தில் அஞ்சு, அருணா, கல்லாப்பெட்டி சிங்காரம் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் பாக்யராஜ் ராஜா கதாபாத்திரத்திலும், அவர் மனைவி பூர்ணிமா ராதா கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்கள். இப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது.

darling darling darling
darling darling darling

இன்று போய் நாளை வா: பாக்யராஜின் வெள்ளி விழா கண்ட படங்களில் ஒன்றுதான் இன்று போய் நாளை வா. இப்படத்தில் பாக்யராஜ் உடன் ராதிகா, காந்திமதி, செந்தில் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஜெயாவின் எதிர்வீட்டில் பசிக்கும் பழனிச்சாமிக்கும் அவரது நண்பர்களுக்கும் ஜெயாவின் மீது காதல் ஏற்படுகிறது. இப்படத்தில் ஜெயாவாக ராதிகாவும், பழனிச்சாமியாக பாக்யராஜ் நடித்திருந்தார்கள். இப்படத்தை மையமாகக்கொண்டு சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை எடுத்துள்ளனர்.

indru-poi-naalai-vaa-full-movie-online
indru-poi-naalai-vaa-full-movie-online

முந்தானை முடிச்சு: பாக்யராஜின் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது முந்தானை முடிச்சு. இப்படத்தில் பாக்யராஜ், ஊர்வசி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் மூலம் முருங்கைக்காய் செம ஃபேமஸ் ஆனது. இப்படம் 200 நாட்கள் தாண்டி வெள்ளி விழா கண்ட திரைப்படம்.

தூறல் நின்னு போச்சு: பாக்யராஜ், சுலோச்சனா, செந்தில், எம்என் நம்பியார் நடித்து வெளியான திரைப்படம் தூறல் நின்னு போச்சு. இப்படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் எம்என் நம்பியார் குஸ்தி வாத்தியாராக நடித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியடைந்த வசூல் சாதனை படைத்தது.

சின்ன வீடு: 1985 ஆண்டு வெளியான சின்ன வீடு திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் கதாநாயகனாகவும் நடித்திருந்தார் பாக்யராஜ். இத்திரைப்படத்தில் நடிகை கல்பனா கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் இது .இத்திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்.

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி: 1995ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி. இத்திரைப்படத்தை பாக்யராஜ் இயக்கி, நடித்து இருப்பார். அவருக்கு கதாநாயகியாக மீனா மற்றும் ஜனகராஜ், விஜயகுமார், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வெற்றி பெற்றது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்