புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

ராக்கிபாயை பாராட்டிய சிவகார்த்திகேயன்.. அப்போ தமிழ் ஹீரோஸ் யாருமில்லையா?

கேஜிஎஃப் நடிகர் யாஷை சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவாவுடன் இணைந்து சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் பிரமாண்டமாகத் தயாரித்திருந்தது.

தீபாவளிக்கு வெளியான இப்படம் ரூ.300 கோடி வசூலீட்டியுள்ள நிலையில் சிவாவின் கேரியரில் மாபெரும் வெற்றிப் படமாகவும் மாறி கமல்ஹாசனுக்கும் லாபத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே அமரன் பட கூட்டணி இன்னும் ஒரு படத்தில் இணைய வாய்ப்பிருப்பதாகவும் இதுகுறித்து கமல் யோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தை அடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். சிவாயின் 23 வது படமாக இதில் அவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ராக்கி பாயை பாராட்டிய பேசிய சிவகார்த்திகேயன்

இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். அப்போது அவர் ராக்கி பாய் யாஷை பாராட்டி பேசினார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

’’கன்னட சினிமாவுக்கு யாஷ் செய்தது விலைமதிப்பற்றதாகும். கேஜிஎஃப் கன்னட சினிமாத்துறையில் வெற்றி. ஆனால் கேஜிஎஃப் 2 இந்திய சினிமாத்துறையின் வெற்றியாக அமைந்தது. ஒரு நல்ல படம் வரும்போது நான் அதைப் பார்க்கிறேன். அவர்களின் பணியை மதிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ராக்கி பாயை பாராட்டியது கன்னட சினிமா ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகர் சக நடிகரைப் போட்டியாளராகப் பார்க்காமல் அவர்களின் திறமையை மதித்து பாராட்டும் போது அது சினிமாவில் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். .

அதேசமயம், கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்களுக்கு முன்னமே ரஜினி, ஷங்கர், கமல், மணிரத்னம், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. அவர்களையும் சிவா பாராட்டியிருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News