படம் வந்ததும் தெரியல, போனதும் தெரியல.. இதுல சக்சஸ் மீட் வேறயா அட்லி! 

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, பிகில்,  தெறி, மெர்சல் போன்ற திரைப்படங்களில் இயக்குனராக கால்பதித்த அட்லி  தயாரிப்பாளராக களமிறங்கிய 2 படம் தான் ‘அந்தகாரம்’.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் OTT தளத்தில்  வெளியானது.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அர்ஜுன் தாஸ், இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வினோத் கிஷன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து படத்தினை மெருகூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘அந்தகாரம்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அட்லி, அந்தகாரம் படக்குழுவுடன் இணைந்து கேக் வெட்டி சக்சஸ் மீட் நடத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை அட்லி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் ‘படம் வந்ததும் தெரியல.. போனதும் தெரியல, இதுல சக்சஸ் மீட் வேறயா?’ என கேட்டு வருகின்றனராம்.