புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சிறகடிக்கும் ஆசை சீரியலால் விஜய் டிவிக்கு கிடைத்த மோட்சம்.. டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலிக்கும் 5 சீரியல்கள்

Vijay Tv Serial: விஜய் டிவியில் உள்ள சீரியல்கள் எல்லாம் சற்று துவண்டு போய் வருகிறது. அதனால் கடந்த சில மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கியது. இதற்கு முக்கிய காரணம் சிறகடிக்கும் ஆசை சீரியலில் ரோகிணியின் ரகசியங்களை மறைத்து வைத்து முத்து மற்றும் மீனாவிற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வரும் அளவிற்கு கதை அமைந்ததால் இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் வெறுத்துப் போய் விட்டார்கள்.

அதே மாதிரி பாக்கியலட்சுமி சீரியலிலும் கதையை இல்லாமல் இழுத்து அடித்துக் கொண்டு வந்ததால் விஜய் டிவி தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. ஆனால் தற்போது சிறகடிக்கும் ஆசை சீரியல் மூலம் மறுபடியும் விஜய் டிவிக்கு மோட்சம் கிடைத்து விட்டது. அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் ஓரளவுக்கு விஜய் டிவி அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறது. அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.

சிறகடிக்கும் ஆசை சீரியல் இந்த வாரம் 7.64 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம் சத்யா பற்றிய விஷயங்கள் வெளி வந்தாலும் அதில் எந்தவித பிரச்சினையும் சந்திக்காமல் முத்து மற்றும் மீனா எஸ்கேப் ஆகிவிட்டார்கள். அதற்கு பதிலாக விஜயா மற்றும் ரோகிணி மொத்த பணத்தையும் கொடுத்து தன் தலையிலே மண்ணை வாரி போட்டுக் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்து வரும் சில நாட்களில் ரோகிணி முத்துவிடம் மாட்டப் போகிறார்.

அடுத்ததாக குடும்ப சீரியல் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும், எந்த வித நெகட்டிவ் விஷயங்களையும் பெரிசாக காட்டாமல் இல்லத்தரசிகள் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படியான ஒரு சீரியலாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 6.43 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மருமகளின் அருமையை புரிந்து கொண்ட பாண்டியன் அவர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் விதமாக மனசு இறங்கி விட்டார்.

இதனைத் தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் வில்லனாக இருந்த கோபி தன் பெற்ற மகள் இனியா கொடுத்த அட்வைஸ் படி திருந்துவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அவருக்கு வந்த ஹார்ட் அட்டாக் மூலம் ஒட்டுமொத்த குடும்பமும் ஹாஸ்பிடலில் இருக்கிறார்கள். மேலும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நாடகம் முடியப்போகிறது. அதனால் 6.22 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக சின்ன மருமகள் சீரியல் 6.02 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. தமிழை எக்ஸாம் எழுத வைக்க வேண்டும் என்பதற்காக பாட்டி போட்ட டிராமாவில் சேது பலிகாடாக மாட்டிக் கொண்டு மனைவியை எக்ஸாம் எழுத கூட்டி போய்விட்டார். இருந்தாலும் வீட்டிற்கு திரும்பிய பொழுது குடும்பத்தில் இருப்பவரிடம் மாட்டிக் கொள்ளாத அளவிற்கு பாட்டி கச்சிதமாக கதை சொல்லி அனைவரையும் நம்ப வைத்து விட்டார்.

கடைசியாக ஆகா கல்யாணம் சீரியல் 5.98 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. அழகி கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அழகின் அப்பா யார் என்ற விஷயம் வெளிவந்துவிட்டது. விஜய்க்கு தெரியாமல் மல்லிகாவுடன் பிறந்த குழந்தைதான் அழகி என்ற விஷயம் தற்போது சூர்யா குடும்பத்திற்கு தெரிந்து விட்டது. ஆனாலும் குடும்பத்திற்காக தன்னை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் பொய் சொன்ன சூர்யா மீது மகா கோபத்துடன் சண்டை போட்டு வருகிறார்.

- Advertisement -

Trending News