சர்கார் படத்தின் கதை தன்னுடையது என போராடி வருண் என்பவர் வெற்றி கண்டார். இதற்கு முக்கிய காரணம் பாக்கியராஜ் என்பது தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த சம்பவம் நிகழ்ந்த பின்பு பலரும் தங்களின் கதையை வேறொருவர் திருடி எடுத்தது பற்றி பேச ஆரம்பித்தனர். அதில் ஒரு சிலர் ஆதாரமும் காட்டினர். அத்தகையை விஷயம் ஒன்றை தான் நாம் பார்க்கப்போகிறோம் ..

வெற்றி மஹாலிங்கம்

அரும்பு மீசை குறும்பு பார்வை, வெண்ணிலா வீடு, விசிறி, ஆகிய படங்களை இயக்கிய வெற்றி மகாலிங்கம் தான் தன் பேஸ் புக்கில் சசிகுமார் மற்றும் சுப்ரமணியபுரம் பற்றி பதிவிட்டுள்ளார்.

Vetri Mahalingam

சந்த்ரு

“இன்று மிக முக்கியமான நாள் முழு அளவில் வல்லமை பொருந்தி… வியாபாரத்தில் சாதனை படைத்த “சர்கார்” படத்தை எதிர்த்து போராடி ஞாயம் பெற்றிட முயற்சித்த நண்பர் வருண் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். இதற்கு துணை நின்ற பாக்யராஜ் மற்றும் எழுத்தாளர் சக்கத்துக்கும், பத்திரிக்கை துறை அனைவருக்கும் நன்றி!!!

subramaniyapuram vs santhru

பல வருடங்கள் முன்பு… வருண் ராஜேந்திரன் போன்று, சசிக்குமார் தயாரித்து இயக்கிய; சுப்பிரமணியபுரம்&; கதை என்னுடையது என்று போராடினேன். அந்தக்கதைக்கு நான் வைத்திருந்த பெயர் “சந்துரு”. என் உடன் பிறந்த சகோதரனின் பெயர். ரவுடியிசம் என்பது ஒருவித போதை, அந்த போதையில் நட்புக்காக கொலை செய்வது தாதாவாகுவது என்கிற கோணத்தில்… மதுரை அண்ணா பேருந்துநிலையம், மதிச்சியம், ஆழ்வார்புரம், எஸ்எம்பி காலனி, என்.எம்.ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடந்த உண்மை நிகழ்வுகளை தொகுத்து திரைக்கதை அமைத்து இயக்குநராகும் முயற்சியில் இருந்தேன். வின்னர் ராமச்சந்திரன் தயாரிக்க… நடிகர் ஜெய்(சந்துரு), நடிகர் சூரி(கருவாயன்) நடிகர் விசித்திரன்(அம்பலம்), நடிகர் பூபதி(கொம்ப) பிரதான கதாபாத்திரங்களாக போட்டோஷூட், இசை தேவா, பாடல் சினேகன், படத்தொகுப்பு சுரேஷ் அர்ஸ், ஒளிப்பதிவு எஸ்.டி.கண்ணன், கலை டிராஸ்ட்கி மருது என பிரமாண்டமாக துவங்கியிருந்தது. பாடல் பதிவுகூட நடந்தது.நடிகர் கஞ்சா கருப்பு சந்துரு கதையில் பிளாக் பாண்டி என்கிற சிறிய பாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. நடிகர் ஜெய்க்கு மதுரை பாசை கற்றுக்கொடுக்க தினமும் அலுவலகம் வருவார். எனது துரதிஷ்டம் படம் ட்ராப் ஆனது.

அதிகம் படித்தவை:  பாய் பிரிண்டுடன் ஏமி ஜாக்சன் ! வெளியானது அந்தரங்க வீடியோ ! ஸ்ட்ரிக்ட்ல்லி 18 + .
fb

அடுத்தடுத்து ஒரு முன்னூறு பேரிடமாவது சொல்லியிருப்பேன். அதில் இயக்குநர் பாலா, ஞானவேல் ராஜா, நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இந்த சூழலில் நடிகர் சூர்யா இந்தக்கதை பண்ணலாம் என்றதும் மகிழ்ச்சி. தினமும் அலுவலகம் சென்று ஞானவேல் ராஜா அவர்களை பின் தொடர்ந்தேன். ஒளிப்பதிவாளர் ராம்ஜி அவர்களிடம் கதை சொல்லியபோது அவர்; சுப்ரமணியபுரம் பற்றி சொன்னார். அதிர்ச்சியில் செய்வதறியாது தவித்தேன்.

அதிகம் படித்தவை:  அனிருத்தின் மிரட்டல் இசையில் "கோலமாவு கோகிலா" படத்தின் பாடல்கள்.!

என் சந்துரு கதை எழுத்தாளர் சங்கத்தில் பதிவாகியிருந்தது. புகார் கொடுக்கலாம் என்று நினைத்தபோது உடனிருந்த சிலர் உன்னை பிரச்சனை பன்ற ஆள்னு முத்திரை குத்திடுவங்கன்னும் சிலர் படம் வந்தவுடன் கொடுக்கலாம் என்றார்கள்.படம் வந்தது…. அது என் கதை என்று சொல்ல முடியாத அளவுக்கு சந்துரு கதையின் சாரம்சத்தை எடுத்துக் கொண்டு திரைக்கதையை 1980க்கு மாற்றி அமைத்திருந்தார். இருந்தும் எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுத்து போராடினேன்….. ஞாயம் கிடைக்கவேயில்லை….அதைவிட பஞ்சாயத்து நடந்த தருணத்தில்…. ஒரே தெருவில் ஒரே டிக்கடையில் அடிக்கடி சந்தித்திருந்த என்னை, சசிகுமார், இவரை நான் பார்த்ததேயில்லை என்றது அதிர்ச்சியாக இருந்தது.

சரி காலம் பதில் சொல்லும் என்ற நம்பிக்கையோடு அடுத்த கதை பண்ணி முயற்சித்தேன். காதலில் தோற்ற சிலர் மீண்டுவர இயலாதது போல எனக்கும் அடுத்து ஒரு வல்லமையான கதை அமையவே இல்லை. மூன்று படங்களை இயக்கியும் பெரிய வெற்றி கிடைக்கல….என்கதையை தழுவி படமெடுத்து வெற்றி பெற்ற சசிகுமாரும் அடுத்த கதை பண்ணி இயக்குநராக வெற்றி பெறவில்லை……… மீண்டு வருவேன்! மீண்டும் வருவேன்! என் போன்ற ஒருவருக்கு இன்று ஞாயம் கிடைத்த மகிழ்ச்சியில் இதை பகிர்ந்திருக்கிறேன்! வேறெந்த உள்நோக்கமும் இல்லை!” என வெற்றி மகாலிங்கம் பதிவிட்டிருக்கிறார்.