எம்ஜிஆரைப்போன்று ரஜினிகாந்தும் அரசியலில் பிரவேசம் செய்வார் என்பதுதான் அவரது ரசிகர்களின் 20 ஆண்டுகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அதற்கேற்ப அவரும் பல தேர்தல் காலங்களில் சில அரசியல் கட்சிகளுக்கு எதிரான கருத்துக்களையும் அதிரடியாக சொல்லி வந்தததால் அவர் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவே கருதப்பட்டு வந்தது.

அதிகம் படித்தவை:  தெறி வசூல் சாதனையை முறியடித்து NO 1 இடத்தில் கபாலி

ஆனால் சமீபகாலமாக தன்னை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்தால்கூட இது அரசியல் சம்பந்தப்பட்ட சந்திப்பு அல்ல, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறி வருகிறார் ரஜினி. அரசியலில் ஈடுபாடு இல்லாதது போலவே காண்பித்துக்கொள்கிறார். இந்த நிலையில், ரஜினியைப்பற்றி பா.ஜ.கவின் சுப்ரமணியசாமி வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ரஜினிகாந்த் எதிலும் நிலை யானவர் அல்ல. அதனால் அவர் அரசியலுக்கு வர தகுதியானவர் இல்லை. தமிழக அரசியலில் ரஜினிக்கு எந்தவித எதிர்காலமும் இல்லை என்று கூறியுள்ளார். சுப்ரமணியசாமியின் இந்த அதிரடியான கருத்தினால் ரஜினி ரசிகர்கள் கொந்த ளித்துள்ளனர்.