Tamil Cinema News | சினிமா செய்திகள்
‘‘தமிழ் பொறுக்கிகள் எல்லாம் எய்ட்ஸ் வந்து சாகணும்’’ டுவிட்டரில் சாபம் விட்ட சு.சாமி
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி கோரி, சென்னை மெரீனா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் போராட்டம் தொடர்பாக பாஜ எம்பியான சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இளைஞர்களை ‘பொர்கீஸ்’ (தமிழ் பொறுக்கிகள்) என்று சாடினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகவலைத்தளங்களில் அவரை தொடர்ந்து கெட்ட வார்த்தைகளைக்கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலை அவருக்கு தற்போதும் தொடர்ந்து வருகிறது.
இதனால் கோபமடைந்த சுப்பிரமணியசாமி, தற்போது அவரின் டுவிட்டர் பக்கத்தில், என்னை கெட்ட வார்த்தைகளில் கமெண்ட் செய்யும் தமிழ் பொறுக்கிகளுக்கு எய்ட்ஸ் வந்து சாகணும் என்று அவர் டுவிட் செய்துள்ளார்.
டுவிட்டரில் சாபம் விட்டதினால், தற்போது அவருக்கு இன்னும் ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இளைஞர்களின் கோபம் அதிகரிக்குமே தவிர அடங்காது. சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதர், சமூக வலைத்தளங்களில் இப்படி கூறிவருவது அரசியல் வட்டாரத்திலும், பாஜக தரப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Happy to see PTs hammering Porkis on twitter. Porkis replies is just vulgar porno bile. Must be suffering from HIV
— Subramanian Swamy (@Swamy39) February 7, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
