fbpx
Connect with us

Cinemapettai

இன்னும் பலபேர் கைது இருக்கு : சுப்பிரமணியசுவாமி புது குண்டு!

subramanian-swami sasikala

இன்னும் பலபேர் கைது இருக்கு : சுப்பிரமணியசுவாமி புது குண்டு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.

ஜெயலலிதா மற்றும் சசிகலா அவரது உறவினர்கள் மீது சொத்து குவிப்பு சம்பந்தமாக முதன்முறையாக நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தவர் பா.ஜ.க-வின் மாநிலங்களவை எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி.

20 வருடத்திற்கு பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர், இன்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து, சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ’20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வென்றுள்ளேன். விரைவில் நிறைய பேர் சிறைக்கு செல்வார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

சுப்பிரமணியசுவாமி கூறியிருக்கும் கருத்து, சொத்து குவிப்பு வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top