Tamil Cinema News | சினிமா செய்திகள்
அமெரிக்காவில் சுப்பிரமணியசுவாமியை ஓட ஓட விரட்டியடித்த தமிழர்கள்!
அமெரிக்காவில் உள்ள சியாட்டல் நகரில் உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய பாரம்பரியமும், கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்பிரமணியசுவாமி சென்றிருக்கிறார்.
சுப்பிரமணியசுவாமி வருகை குறித்த தகவல் அறிந்த சியாட்டல் பகுதியில் வாழும் தமிழர்கள் ஒன்றாக திரண்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
சுப்பரமணிய சுவாமி பங்கேற்கும் அரங்கத்தின் வாசலிலும், அருகே உள்ள சாலைகளிலும் தமிழர்கள் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கி பாதகைகளுடன் மறியலில் ஈடுபட தயாராக இருந்திருக்கிறார்கள்.
தமிழர்களின் போராட்ட முழக்கங்களைப் பார்த்த விழாக்குழுவினர், சுப்ரமணியசாமியை ஒரு பழைய காரில் யாருக்கும் தெரியாத வகையில் அழைத்து வந்திருக்கின்றனர். ஆனாலும் அதைக் கவனித்து விட்ட தமிழர்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் முழக்கமிட்டுள்ளனர்.
“நாங்கள் தமிழர்கள்.. நாகரீகம் மிக்கவர்கள் தமிழனம் தொன்மையானது தமிழர் நாகரீகம் மேன்மையானது நாகரீகம் தெரியாத ‘பொறுக்கி’ சுப்ரமணிய சாமியே திரும்பிப் போ நாகரீகம் தெரியாதவர் இந்தியப் பாரம்பரியம் பற்றிப் பேசுவதா” போன்ற முழக்கங்களை ஆங்கிலத்தில் திட்டியப்படியே அரங்கத்தை நோக்கி சென்றிருக்கிறார்கள்.
நிலைமையை உணர்ந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் வந்து என்னவென்று கேட்டார்கள். தமிழனத்தை தரக்குறைவாக பேசியவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்துள்ளோம் என்றவுடன், அமைதியாக போராடுங்கள் என்று கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர்.
அமெரிக்காவில் தமிழர்களின் எதிர்ப்பை சற்றும் எதிர்ப்பார்க்காத சுப்ரமணியசாமி பதற்றமடைந்திருக்கிறார்.
சுப்ரமணிய சாமி பேசும் வரை அமைதியாக அரங்கத்திற்குள் இருந்த தமிழர்கள், அவர் பேச ஆரம்பித்ததும் தமிழகர்கள் அனைவரும் ‘நாங்கள் தமிழர்கள், தமிழர்களை இழிவாக பேசியதைக் கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம், தமிழர்கள் வாழ்க, தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
வெளியே வந்த தமிழர்கள், நிகழ்ச்சி முடியும் வரையிலும் காத்திருந்தனர். தமிழர்கள் போய்விட்டனர் என்று நம்பி வந்த சுப்ரமணிய சாமி மீண்டும் தமிழர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்.
மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் என கடும் குளிராக இருந்த போதிலும் குழந்தைகளுடன் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சுப்ரமணிய சாமி திரும்பிப் போகும் வரையிலும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கைக் குழந்தை ஒருவர் தமிழன் டா என்ற பதாகையுடனும், அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலி கட்டினவனுக்கு ஹார்வர்ட் ஒரு கேடா போன்ற பதாகைகளையும் தமிழில் வைத்திருந்தனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
