ஜல்லிக்கட்டு அனுமதி கோரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் அறவழி போராட்டம் நடத்தினர். போராட்டம் தீவிரமானதை அடுத்து மத்திய மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்றினர்.

மாணவர்களின் இந்த அறிவழி போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பா.ஜ.கவின் ராஜ்ய சபா எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி போராட்டக்காரர்களை பொறுக்கிகள் என்று தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், தனது ட்வீட்டரில், ஏன், பொறுக்கிகளே இந்திய குடியரசு தினத்தை துரோகமாக பார்க்கிறீர்கள். உங்களுக்கு வயதாகிவிட்டதா? அதனால் தான் வரவில்லையா என்று ஏளனம் செய்திருக்கிறார்.

பொறுக்கி என்பதற்கு அடையாளம், அரைகுறையாகவோ அல்லது முழுமையாகவோ படிப்பறிவு இல்லாதவர்கள், மோசமாக பேசக்கூடியவர்கள், தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுபவர்கள் தான் என்றும் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுக்கும் போது, அமெரிக்க வீரர்களை பார்த்து ஈராக்கை அப்போது ஆண்ட ‘காமிக்கல் அலி’ அதாவது நகைச்சுவையான மன்னன் அலி பயந்து ஓடிவிட்டான்.

அதுபோல தான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் போலீசாரின் தடியடிக்கு பயந்து ஓடி விட்டார்கள் என்று ஏளனமாக கூறியிருக்கிறார் சுப்பிரமணிய சுவாமி.

சுப்பிரமணிய சுவாமி தொடர்ந்து தமிழர்களை இழிவுபடுத்தியும், விமர்சித்து பேசி வருவது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.