Politics | அரசியல்
சுபஸ்ரீ மரணம், திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. குவியும் பாராட்டுக்கள்..
அதிமுக கட்சியினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஓ.பி.எஸ் நேற்று பள்ளிக்கரணையில் உள்ள திருமண மண்டபத்திற்கு வரும் வழியில் கட்சிக்காரர்கள் பேனர்கள் வைத்து உள்ளனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த சுபாஸ்ரீ என்ற பெண் பேனர் தன் மீது விழுந்து வாகனத்தை ஓட்ட முடியாமல் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.
தற்போது இந்த சம்பவம் சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உடனடியாக இது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது மட்டும் அல்லாமல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் இனி தி.மு.க நடத்தும் எந்த கூட்டங்களிலும், விழாக்களிலும் பேனர்கள் வைக்கப்பட்டால் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மீறி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடுத்திருக்கும் இந்த முடிவிற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு குவிந்துள்ளது. இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளதால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
