News | செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கே உத்தரவு போடும் சுப்பிரமணியசாமி
சென்னை கடற்கரை முழுவதுமே 144 தடை உத்தரவு போட்டு யாரையுமே அந்த பக்கம் செல்ல விடக் கூடாது என்று கிட்ட தட்ட உத்தரவிடுவது போல சுப்பிரமணிசாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமிக்கே ஒரு அரசு உத்தரவிடுவது போல இருக்கும் இந்த டுவிட்டில் கூறி இருப்பதாவது,
Palanisamy govt must notify from High Court to Lighthouse in Marina as subject to IPC 144, applicable for Goonda Act and NSA for one month
— Subramanian Swamy (@Swamy39) February 17, 2017
பழனிச்சாமி அரசு உடனடியாக சென்னை உயர்நீதிமன்றம் முதல் மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மேலும் இங்கு கூடுவோர் மீது குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்து கைதாவோரை குறைந்தபட்சம் 1 மாதம் சிறையில் தள்ள வேண்டும் என்று சுப்பிரமணியசாமி கூறி உள்ளார்.
