தென் இந்திய ஸ்டண்ட் யூனியன் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவுபெறு கின்றன. இந்த சங்கத்தில் தென் இந்திய சினிமா, தொலைக்காட்சி ஸ்டண்ட் இயக்குனர்கள், ஸ்டண்ட் கலைஞர்கள், உறுப்பினர் களாக உள்ளனர்.

மாலை 5 மணி அளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இந்த விழா கோலாகலமாக துவங்கியது. இதில் நடனம், நகைச்சுவை, ஸ்டண்ட் காட்சிகள் போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட தென்னிந்திய ஸ்டண்ட் கலைஞர்கள் பணி புரிந்த அனைத்து திரையுலக நாயகர்கள், நடிகர்கள், நடிகைகளுக்கும் அழைப்பு விடப்பட்டது. அதன்படி விழாவில் ரஜினி, விஜய், விஷால், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், நாசர், பொன்வண்ணன் உள்ளிட்ட தமிழ்பட முன்னணி நடிகர்கள் பங்கேற்கின்றனர்.

மலையாள நாயகர்கள் மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு கதாநாயகர்கள் சிரஞ்சீவி, ராணா, பால கிருஷ்ணா மற்றும் கன்னட, இந்தி முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். 200 நடிகர்- நடிகைகள் இந்த விழாவில் பங்கேற்கிறார்கள்.

இதுபற்றி ஸ்டண்ட் யூனியன் தலைவர் அரசு கூறியதாவது:-

மொத்தம் 6 மணி 30 நிமிடம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது தவிர 10 கதாநாயகர்கள், காமெடி நடிகர்கள், 12 நடிகைகள் இந்த நிகழ்ச்சிக்காக மேடை யேறுகிறார்கள்.

மொட்டை ராஜேந்திரன் உட்பட ஸ்டண்ட் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். வழக்கமான பாட்டு, டான்ஸ் என்று நடைபெறும் நிகழ்ச்சியாக இல்லாமல், மேடையில் ஸ்டண்ட் நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக டான்ஸ் மாஸ்டர் கலா செயல்படுகிறார். இது மாறுபட்ட நிகழ்ச்சியாக இருக்கும்.” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

இதுபற்றிய ட்வீட்கள் உங்களுக்காக

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நன்றி சன் டிவி மற்றும் மாலை முரசு.