மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் தன் 62வது படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி மற்றும் கத்தி படத்தை தொடர்ந்து இவர்களை இணையும் இப்படத்தை சன் பிச்சர் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது, விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

vijay 62
vijay 62

படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் கிரீஸ் கங்காதரன் ஒளிபதிவு செய்கிறார் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.

Vijay

ஈசிஆரில் உள்ள பனையூரில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறுகிறது . அங்கு கிட்டத்தட்ட 20 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில், ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க தெலுங்கு படவுலகில் பிரபல் ஸ்டண்ட இயக்குனர்களாக திகழ்ந்து வரும் ராம், லக்‌ஷமண் (இரட்டையர்கள்) இணைந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதிகம் படித்தவை:  ஏ ஆர் ரஹ்மானை சந்தித்த சிவகார்த்திகேயன் ! இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே !
Ram-Laxman

இப்போது கொல்கத்தாவில் நடந்து வரும் படப்பிடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை ராம் – லக்‌ஷமண் இருவரின் பயிற்சியில் தான் நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் நடிக்கும் படத்தில் தெலுங்கு படவுலகின் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் இணைந்து பணியாற்றுவது இது தான் முதல் முறை.

அதிகம் படித்தவை:  எமோஷனின் உச்சம். இமைக்கா நொடிகள் படத்தின் "காதல் ஒரு ஆகாயம்" வீடியோ பாடல்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

இந்த இரட்டையர்கள் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் மற்றும் ரேம் சரணின் ஆஸ்தான ஸ்டண்ட் மாஸ்டர்கள். மேலும் இவர்கள் இது வரை 100 படங்களுக்கு மேல் பணியறிந்துள்ளனர். அதுமட்டுமன்றி 5 முறை ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றவர்கள்.