Connect with us
Cinemapettai

Cinemapettai

Visuvasam

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் விசுவாசம் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் !

விசுவாசம்

மீண்டும் சிவா கூட்டணியில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடித்துவரும் படம். ஜோடியாக நயன்தாரா, காமெடிக்கு ரோபோ ஷங்கர், யோகி பாபு. வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, இமான் இசை அமைக்கிறார்.

தீபாவளிக்கு இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முழுவீச்சில் உள்ளதாம் படக்குழு. ஏற்கனவே ஹைதராபாதில் முதல் கட்ட ஷூட்டிங் முடிந்த நிலையில், விரைவில் இரண்டாவது ஷெடுல் மும்பையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் இணைந்துள்ளர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர் மாஸ்டர் சூப்பர் சுப்புராயனின் மகன் ஆவார். மங்காத்தா’ படத்திற்கு பிறகு அஜித்துடன் மீண்டும் இணைகிறார் திலீப் சுப்புராயன். ஏற்கனவே ஹைதராபாத்தில் ஒரு சண்டை காட்சியை திலீப் சுப்புராயன் சமீபத்தில் படமாக்கினாராம்.

சமீபத்தில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, காலா படங்களில் இவரின் ஸ்டண்ட் பெரிதும் பேசப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top