சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தில் பள்ளி, கல்லுரரிகள் தேசிய கொடி ஏற்றிய பின்னர் மாணவர்களுக்கு சாக்லெட் வழங்குவது வழக்கம்.

மாணவர்கள் துவங்கிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் விளைவாக இனிவரும் காலங்களில் வெளிநாட்டு உணவு பொருட்களை வாங்குவது இல்லை என்ற நிலைபாட்டை தமிழக மக்கள் பரவலாக எடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நாடுமுழுவதும் கொண்டாப்பட்ட குடியரசு தினவிழாவில் இனிப்பு வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் கொடி ஏற்றிய பின்னர் சாக்லெட்டிற்கு பதில் கடலைமிட்டாய் வழங்கப்பட்டது.அதை மாணவர்கள் மகழ்ச்சியுடன் வாங்கி சாப்பிட்டனர்.

இந்த மாற்றம் ஜல்லிகட்டிற்குகாக போராடிய மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.