பாடாய்படுத்தும் தேர்வுகள்.. தேர்வு எழுதியதில் 70% பேர் தோல்வி

பள்ளிகளுக்கு கல்லூரி மாணவர்களுக்கு என பலருக்கும் ஆல் பாஸ் என்ற செய்திகள் வந்ததும் பல மாணவர்கள் குஷியாக இருந்தனர். ஒரு வழியா தேர்வு எழுதாமலேயே பாஸ் ஆகி விட்டோம் என்று பலரும் ட்ரீட் வைத்துக் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் அடுத்து எதிர்பார்த்து காத்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்திகள் தான் வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் பிப்ரவரி 1 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டன. அனைத்து தேர்வும் 60 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. அதில் இரண்டாம் ஆண்டு மூன்றாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் அதிகமாக தேர்வு எழுதினர். நம் மாணவர்கள் ஏதாவது சேட்டையை செய்வார்கள் என்று பல தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு கண்காணித்து வந்தனர்.

மேலும் ஆன்லைன் வாயிலாக தேர்வு எழுதுவது மிகவும் பிரச்சனையாக இருக்கிறது என்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதில் ஆன்லைன் தேர்வுக்கு 80% மதிப்பெண், நேர்முக பதிலுக்கு 20 சதவீத மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டன. இந்த முடிவுகள் கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது

இதில் தேர்வு எழுதியவர்களில் 70 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளது தெரியவந்துள்ளது. வெறும் 30% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இதில் காப்பியடித்தல் தேர்வில் முறைகேடு செய்தல் கேமராவை பார்த்து எழுதுதல் என அனைத்தையும் காரணமாக காட்டி தேர்ச்சி பெறவில்லை என ஒரு குண்டை போட்டு விட்டது அண்ணா பல்கலைக்கழகம்.

bit-exam
bit-exam

இதனால் கடுப்பான மாணவர்கள் இந்த தேர்வு முறை எல்லாம் எங்களுக்கு செட்டாகாது. ஒழுங்காக வழக்கம்போல் தேர்வை நடத்துவதை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.