மாணவர்கள் இனி ஓய்வதாக இல்லை.மொத்தமாக திரண்டால் என்ன நடக்கும் என்பதை மக்களும் மாணவர்களும் ஏன் உலகமே ரசித்துப் பார்த்து விட்டது.

அதிலும் மக்களும் சேர்ந்து இணைந்து கொள்வார்கள் என்பதை உலகமே எதிர் பார்க்கவில்லை. அந்த அளவு ஒரு யுகப் புரட்சி நடந்து முடிந்து விட்டது.

கடைசி நாள் சில துரோகங்கள் காரணமாகவும், எங்கிருந்தோ வந்த அழுத்தம் காரணமாகவுமே போலீஸ் லத்தியைச் தூக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

ஆனாலும் இந்த வெற்றி சாதாரண வெற்றியே இல்லை. இனி மாணவர்களுக்கு தேவை அப்பழுக்கில்லாத ஒரு தலைமை.

அந்த தலைமை ஆட்சியர் சகாயம் தான் என்பதில் மாணவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

ஆனால் சகாயம் எனக்கும் வலைத்தளப் பேச்சுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி விட்டார்.

ஆனால், அவரை அரசியலுக்கு இழுக்காமல் விட மாட்டோம் என்று உறுதியாக இருக்கும் மாணவர்கள் ஒரு குழுவாக நேரில் சென்று சகாயத்தை சந்திக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டார்கள்.

இந்த குழுவிற்கு நடிகர் லாரன்ஸ் தான் தலைமை தாங்குவார் என்கிற செய்தி மட்டும் வலைத்தளங்களில் சிறு சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

பார்க்கலாம்.