தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தி ஈடுபட்டனர்.

மக்களின் தொடர் போராட்டத்தால் மத்திய அரசு பின்வாங்கியது. மீத்தேன் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் தற்போது அதே திட்டத்தை ஹைட்ரோ கார்பன் என்று பெயர் மாற்றம் செய்து திரும்பவும் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் என்ற பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும், மீத்தேன் திட்டம் என்பது, நிலத்திலிருந்து 6000 அடிக்கு கீழே போர்வெல் மூலம் நிலக்கடி படிமங்களில் இருக்கு மீத்தேனை எடுப்பதாகும்.

அப்படி எடுக்கும் போது நிலத்தின் நீராதாரம் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு நிலம் மலட்டுதன்மை அடைத்து விவசாயம் பொய்த்து போய்விடும் என்று கூறப்படுகிறது.

தற்போது புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு புரட்சி இளைஞர்கள் அமைப்பு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக வலைத்தளங்களில் பரவி வருகிறது.