girls

மத்திய பிரதேச மாநிலத்தில் சிட்னா என்னும் ஊரில் உடன் படித்த தோழிக்கு எட்டாம் வகுப்பு மாணவி விஷம் கொடுத்து கொல்ல முயன்ற கொடுமை நிகழ்ந்துள்ளது.

இதற்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தன்னை விட அதிகமான மதிப்பெண்களை தன் தோழி எடுத்ததால் பொறாமை தாங்க முடியாமல் தண்ணீரில் கொசு மருந்தை கலக்கி கொடுத்துள்ளார் அந்த மாணவி.

தண்ணீரை குடித்த சில நிமிடங்களில் மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்த மாணவியை உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

நல்ல வேளையாக மாணவி வாந்தி எடுத்துவிட்டதால் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பித்துவிட்டார். இதனிடையே பள்ளியில் இருந்த CCTV காமிரா மூலம் பொறாமை கொண்ட மாணவி தண்ணீரில் கொசு மருந்தை கலக்கியது அம்பலமானது.

குட்டு உடைந்துவிட்டதே என்று பயந்த அவள் தற்கொலை செய்து கொள்வதற்காக அவளும் கொசுமருந்தை குடித்துவிட்டாள். அவளை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருந்தாலும் எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்று கூறியுள்ளனர்.

பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் இதுபோன்ற சம்பவங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். இதற்கான தீர்வு உங்கள் கையில்தான் உள்ளது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான மன அழுத்தமே இத்தகைய குற்றங்களுக்கு அடிப்படையாகும் என்று குழந்தைகள் மனவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: நல்ல வேளை நம்ம நாட்டுல தயாரிச்ச கொசு மருந்துங்கிறதால ரெண்டு பொண்ணுகளும் சாகாமல் தப்பிசுருச்சுங்க. இதே இது தரமான மருந்தை குடிச்சிருந்தால் நிலைமை என்னவாகிருக்கும்?