fbpx
Connect with us

Cinemapettai

செல்போனுக்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரை விட துணிந்த மாணவன்

Tamil Nadu | தமிழ் நாடு

செல்போனுக்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரை விட துணிந்த மாணவன்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பரசுராமன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சங்கர். லாரி ஓட்டுனரின் மகனான நவீன்குமார் கோயம்புத்தூரில் உள்ள ஆர்விஎஸ் கல்லூரியில் பாம் டி பிரிவு முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் சனி ஞாயிறு விடுமுறை என்ற காரணத்தால் கடந்த வெள்ளியன்று கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் வரை பேருந்தில் பயணம் செய்து அங்கே இருந்து நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் இரவு 8 மணிக்கு ரயில் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வரும்பொழுது ஊத்துக்குளி அருகே பாலக்காடு ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது நவீன்குமார் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார்.

அப்போது தனது கையில் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்தது அதை தவற விட்டதை உணர்ந்த மாணவன் சிறிதும் சொந்த பந்தங்களை எண்ணிப் பார்க்காமலும் எதிர்காலத்தை உணராமலும் உடன் வந்த நண்பர்களிடம் தெரிவிக்காமலும் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த செல்போனை எடுக்க முயற்சித்தது பெரும் அதிர்ச்சியாக உள்ளது மேலும் கீழே விழுந்ததில் தலை நெற்றி கை போன்ற பகுதிகளில் காயம் ஏற்பட்டு நெற்றியில் தற்போது எட்டு தையல் போட்டுள்ளது.

அங்கு இருந்த பகுதி மக்கள் உதவியுடன் அருகே இருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இதனிடையே தன்னுடன் ரயிலில் பயணம் செய்த நண்பன் முகமது பாசில் ஈரோடு ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை உரிய சிகிச்சை அளித்து பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top