fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. யாரு இந்த குட்டி பையன் என கேட்கும் நெட்டிசன்கள்

str maanadu

Photos | புகைப்படங்கள்

வைரலாகுது சிம்புவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. யாரு இந்த குட்டி பையன் என கேட்கும் நெட்டிசன்கள்

நம் அனைவர் வீட்டிலும் செல்ல பிள்ளையாக இருந்தவர் தான் சிலம்பரசன். சிறு வயதிலிருந்தே தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது, பாட, ஆட வைப்பது என பன்முக திறமை உடையவராக சிம்புவை ஆக்கிவிட்டார் டி ராஜேந்தர். மிகவும் குறைந்த வயதில் சிம்பு தொட்ட உச்சங்கள் ஏராளமோ ஏராளம்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, சிம்புவின் இந்த அசுர வளர்ச்சி அவரை அதலபாதாளத்திற்கு தள்ளியது. தயாரிப்பாளர்கள் தெறித்து ஓட ஆர்மபித்தனர், நடிகர் சங்கம் ரெட் கார்ட் கொடுக்கும் அளவுக்கு சென்றது நிலை. உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதான தோற்றத்தில் இருந்தார்.

கொரானா ஊரடங்கு நாட்களை தனக்கு ப்ளஸாக மாற்றினார். தனது ரசிகர்களுக்காக 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்து தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறி ஆச்சர்யப்படவைத்தார் சிம்பு. அடுத்ததாக சரியான நேரத்திற்கு ஷூட்டிங் செல்வது, டப்பிங் முடிப்பது என கலக்கி வருகிறார்.

மாநாடு, பத்து தல என செம்ம பிஸியாக உள்ளார் சிம்பு. சமூகவலைத்தளங்களிலும் மனிதர் ஆக்டிவாகவே இருக்கிறார்.

STR ATMAN

இவர் சமீபத்தில் பதிவிட்ட போட்டோஸ் லைக்ஸ் குவித்து வருகிறது.

STR ATMAN

இளமை தோற்றத்துடன் உள்ள இவரை நெட்டிசன்கள் செல்லமாய் கலாய்த்தும், கொஞ்சியும், பாராட்டியும் வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top