Annapoorna Srinivasan: இப்போது அரசியல் வட்டாரம் முழுவதும் அன்னபூர்ணா ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு நடந்த தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் நடந்த சம்பவம் தான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஸ்ரீனிவாசன் சாதாரண பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் அதன் உள்ளே வைக்கும் க்ரீமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி இருக்கிறது. அதேபோல் காரம் இணைப்பு என அனைத்துக்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி இருக்கிறது.
இதை குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார். அதை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் அது விவாதமாக மாறியது. ஆனால் உடனேயே சீனிவாசன் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியானது.
இதுதான் தற்போது பரவி வரும் கண்டனங்களுக்கு காரணமாக இருக்கிறது. அப்படி என்ன அவர் தப்பாக பேசி விட்டார்? இதுதான் உங்கள் ஜனநாயகமா? எதற்காக மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்? அதையும் வீடியோ எடுத்து போட்டு அவரை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் விமர்சித்து வருகின்றனர்.
நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர்
அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி உட்பட பல அரசியல் பிரபலங்களும் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் சீனிவாசன் மிரட்டப்பட்டு தான் மன்னிப்பு கேட்டாரா? என்ற ரீதியிலும் விவாதங்கள் எழுந்துள்ளது.
இப்படி சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ள இந்த விவகாரத்தில் பிஜேபி அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டது தவறுதான் என வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அன்னபூர்ணா ஸ்ரீனிவாசனுக்கு ஆதரவாக நாங்கள் நிற்போம் என பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை ஆணித்தரமாக முன்வைத்து வருகின்றனர். அதனால் இந்த விவகாரம் அவ்வளவு எளிதில் முடிந்து விடாது. இன்னும் எதிர்பார்க்காத சில பூகம்பங்கள் வெடிக்கும் என தெரிகிறது.
அன்னபூர்ணா சீனிவாசனுக்கு ஆதரவாக இறங்கிய பிரபலங்கள்
- சூரிய ஒளியிலிருந்து அணு உலை தயாரிக்க சீமான் சொன்ன சிந்தனை
- புதிய கட்சியை தொடங்குகிறாரா அண்ணாமலை?
- பட்ஜெட் தாக்கலால் 2 வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை