Connect with us
Cinemapettai

Cinemapettai

edappadi-palaniswami-1

Tamil Nadu | தமிழ் நாடு

அரசியல் எதிரிகளை திட்டங்களால் திணறடிக்கும் எடப்பாடியார்.. என்ன ஒரு ராஜதந்திரம்!

தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முதல்வராக ஆட்சி புரிந்து வருகிறார். இவர் பல நலத்திட்டங்கள் தமிழ்நாட்டை செதுக்கிய தோடு மட்டுமல்லாமல், தமிழகத்தோடு சேர்த்து தன்னையும் செதுக்கியுள்ளார்.

மேலும் இவருடைய ராஜதந்திரத்தை பயன்படுத்தி சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியும் காட்டியுள்ளார். அதாவது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் அரசாணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம்  ஏற்பட்டது.

ஆனால் எடப்பாடியாரோ திடீர் அரசாணையை வெளியிட்டு ‘தான் யாருக்கும் கைப்பாவை அல்ல’ என்பதை நிரூபித்துக் காட்டி அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

இதனையடுத்து  ராஜ்பவன் வேறு வழியே இல்லாமல் இந்த மசோதாவுக்கு அனுமதி அளித்தது. இதனால் ஆளுநர் கோபம் அடைவதற்கு முன்பே அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து சாதுரியமாக அவரை சமாளித்தார் எடப்பாடியார்.

இதனால் ஏற்கனவே இட ஒதுக்கீடு விவகாரத்தில் இரண்டு முறை போராட்டம் நடத்திய திமுகவால் இந்தப் பெயரை தட்டிச் செல்ல முடியாமல் போனது. இவ்வாறு தற்போதெல்லாம் ஸ்டாலின் பல சறுக்கல்களை சந்தித்து அரசியல் களத்தில் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.

ஏனெனில் 90களில் ஸ்டாலின் மாநகராட்சி மேயராக இருந்தபோது அவருடைய செயல்பாடுகளை கட்சியை தாண்டி பலர் பாராட்டினர். அப்போதுதான் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் ரஜினிகாந்த் கூட ஸ்டாலின் மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஏனெனில் ஸ்டாலின் என்றால் துண்டு சீட்டு பார்த்து படிப்பவராகவும், பேசுவதற்கு திணறுபவராகவும், போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பவராகவும் அடையாளம்  கொல்லப்பட்டு அரசியலில் மிகப் பின்தங்கிய நிலையை எட்டியுள்ளார்.

ஆனால் எடப்பாடி  பழனிசாமி தற்போது தாறுமாறாக வேற லெவல் வளர்ந்திருக்கிறார். ஏனெனில் திமுகவை தவிர்த்து அவருக்கு இன்று அரசியலில் எதிரிகளே இல்லை. இவரால் வைகோவின் கரம்பிடித்து நடக்க முடியும், திருமாவளவனிடம் பாராட்டைப் பெற முடியும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தமிழ் மக்களின் மத்தியிலும் பல பிரமுகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற பல காரணங்கள் உண்டு.

இதோ அவை உங்களுக்காக:

  • நவம்பர் 1ம் தேதி- தமிழ்நாடு தின அறிவிப்பு
  • பொங்கலுக்கு 2 ஆயிரம் ரூபாய்
  • ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை கோரிக்கை
  • 8 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த கலைச்செம்மல் விருதுகளை வழங்கியது
  • பொதுத்தேர்வு ரத்து
  • செமஸ்டர் ஆல் பாஸ்
  • காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு
  • 11 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கை நடத்தி முடித்தது
  • அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு சத்துணவுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு முட்டை ஆகியவற்றை வீட்டிற்கே சென்று வழங்குவது

இவ்வாறு பல நலத் திட்டங்களால் எதிர்க்கட்சிகளை திணறடித்து  தனக்கென்று ஒரு நல்ல பெயரை உருவாக்கி, மக்கள் மத்தியில்  நல்வரவேற்பை பெற்று சாதனை நாயகனாக திகழ்ந்து வருகிறார் எடப்பாடியார்.

edapaadi

edapaadi

Continue Reading
To Top