Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த மூன்றையும் கடை பிடித்தால், சிம்பு மீண்டும் உயர்வார்! அவர் இடம் அப்படியே உள்ளது – விவேக்
தேசிங்கு ராஜா சிலம்பரசன்

STR
சிறுவயது முதலே தன் தந்தை டி ஆர் படங்களில் தோன்றியதால், நம்ப வீடு பிள்ளை போல் ஆனவர். சிறுவனாக, டீனேஜராக, வாலிபனாக பல பரிணாமங்களை கடந்த இவர் செய்த மற்றும் சந்தித்த பிரச்சனைகள் ஏராளமோ ஏராளம். அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறப்பட்ட இவர் தொடர் தோல்வி, அடிக்கடி காதல் பிரேக் – அப், அனைவரையும் எடுத்தெறிந்து பேசுவது என்று தன் சினிமா மார்க்கெட் மட்டுமல்ல, தன் சுய மதிப்பையும் இழக்கும் நிலையும் உருவானது.
எனினும் ஏ ஏ ஏ படம் தான் இவருக்கு திருப்புமுனை. பேட் பாய் அவதாரத்தில் இருந்து குட் பாயாக மாறுவதற்கு வழி வகை செய்தது. சில மாதங்களாகவே மணிரத்தினத்தின் ஷூட்டிங், ஓவியாவின் படத்துக்கு இசை அமைப்பது, நேரம் கிடைக்கும் பொழுது சமூக விழிப்புணர்வு என்று இவரின் ட்ராக் மாறியது.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு

simbu
சிம்புவின் தேனாம்பேட்டை ரசிகர் மன்ற நிர்வாகி மதன். கடந்த வாரம் துரதிர்ஷ்ட விதமாக இவர் மரணம் அடைந்தார். இந்நிலையில் சிம்பு சில இடங்களில் தானே கணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டினார். இதனை இவரின் ரசிகர்கள் சிலர் போட்டோ , வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்த சம்பவத்தை தொடர்பு படுத்தியே சின்னக்கலைவாணர் விவேக் தன் கருத்தை டீவ்ட்டரில் பதிவிட்டுள்ளார்.
தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது pic.twitter.com/DtRAjFccF0
— Vivekh actor (@Actor_Vivek) May 19, 2018
இவரின் கருத்தை பலரும் ஆமோதித்து வருகின்றனர்.
